திரிபுரா மாநிலத்தில் உள்ள தினசரி நாளிதழ் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் பட்டப்பகலில் 3 பேரை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவில் உள்ள அகர்தலா நகரில் 'தைனிக் ஞானதூத்' என்ற நாளிதழ் அலுவலகம் உள்ளது.
நேற்று மாலை 3 மணியளவில் இந்த அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், தரை தளத்தில் பணியிலிருந்த 'புரூஃப் ரீடர்' மற்றும் டிரைவர் ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்தினர்.
இச்சம்பவத்தை பார்த்த நிருபர் ஒருவர் மயங்கி விழுந்ததால் அவரை ஒன்றும் செய்யாமல் முதல் மாடிக்கு சென்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முதல் மாடியில் அலுவலக மேனேஜர் மட்டும் தனியாக இருந்தார். கத்தியுடன் மர்ம நபர்கள் பாய்ந்தோடி வருவதை கண்ட மேனேஜர் தப்பியோட முயன்றார்.
அவரை மடக்கிப் பிடித்து சரமாரியாக கத்தியால் குத்திய மர்ம நபர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பியோடினர்.
கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த புரூப் ரீடர் சுஜித் பட்டாச்சார்யா (32), அலுவலக டிரைவர் பல்ராம் கோஷ் (40), மேனேஜர் ரஞ்சித் சவுத்ரி (60) ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர்
0 கருத்துகள்:
Post a Comment