தன்னுடைய சகோதரியை கூடப் பிறந்த அண்ணனே பாலியல் பலாத்காரம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் புகார் கூறியும் பொலிஸார் வழக்குப் பதிவு செய்யாததால் மனம் உடைந்து போன அப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட பெண் தனது 30 வயது தங்கையுடன் குவாலியரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.
நான்கு நாட்களுக்கு முன்பு அவரது அண்ணன் லக்கான் பதாம் வீட்டுக்கு வந்துள்ளார். தன்னுடன் சொந்த வீட்டுக்கு வந்து விடுமாறு இருசகோதரிகளையும் கூப்பிட்டுள்ளார் பதாம்.
ஆனால் அவர்கள் வர மறுத்து விட்டனர். இதநால் கோபமடைந்த பதாம், தனது தங்கையை கட்டாயப்படுத்தி கற்பழித்து விட்டார்.
இந்தக் கொடுமையைத் தடுக்க முடியாமல் இன்னொரு தங்கை கதறி அழுதது மேலும் கொடுமையானது. பின்னர் இரு சகோதரிகளும் பொலிஸ் நிலையம் சென்று நடந்ததைக் கூறி புகார் கொடுத்தனர்.
ஆனால் பொலிஸார் புகாரை வாங்க மறுத்து விட்டனர். எப்ஐஆர் போட மறுத்து விட்டனர். மேலும் இரு சகோதரிகளையும் அசிங்கமாகவும் திட்டி விமர்சித்துள்ளனர்.
இதனால்தான் மனம் உடைந்து பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக தற்போது விசாரணைக்கு மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்
0 கருத்துகள்:
Post a Comment