சென்னை மத்திய குற்றப்பிரிவு தலைமை காவலர் எம்.கிருஷ்ணகுமார் மாரடைப்பு காரணமாகவும், கரிவலம்வந்த நல்லூர் போலீஸ்காரர் வைகுண்ட மணி சாலை விபத்திலும் உயிரிழந்தார். என்ற செய்தி கேட்டு நான் மிகவும் துயரம் அடைந்தேன். இதேபோல் புளியம்பட்டி தலைமை காவலர் ஞானக்கண் ஜெயசிங், வைப்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ், ஆகியோர் மாரடைப்பாலும், கோடம்பாக்கம் சிறப்பு உதவி ஆய்வாளர் குமாரசாமி உடல் நலக் குறைவாலும், குன்றத்தூர் தலைமை காவலர் ராஜேந்திரன் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். அவர்களது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் அனுதாபம் தெரிவிப்பதுடன் இவர்களது குடும்பத்துக்கு முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் உதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இதேபோல் சத்திய மங்கலம் மஜரா அணைக்கரை பகுதியை சேர்ந்த மாதி காட்டு யானை தாக்கி உயிர் இழந்தார் என்ற செய்தி கேட்டு துயரம் அடைந்தேன். அவரது குடும்பத்துக்கு இரங்கல் தெரிவிப்பதுடன் ரூ.3 லட்சம் உதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இதேபோல் பேராவூரணி வட்டம் பெரியநாயகிபுரம் கிராமம் அருகே வாகன விபத்தில் உயிர் இழந்த இளை யாத்தான்குடி கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி, சென்னை அண்ணா சாலையில் வாகன விபத்தில் உயிர் இழந்த கங்கைகரைபுரம் இந்திராணி, திம்மராஜபுரம் நெடுஞ்சாலையில் விபத்தில் உயிரிழந்த ஒரிக்கை கிராமத்தை சேர்ந்த சீனிவாசன், ஆகியோர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதுடன் அவர்களது குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறி உள்ளார்
0 கருத்துகள்:
Post a Comment