மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபார நிறுவனம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களை பட்டை தீட்டுவதற்காக பெல்ஜியம் நாட்டிற்கு அனுப்பி வைத்தது.
24 பொட்டலங்களாக தனியார் கொரியர் மூலம் அனுப்பப்பட்ட வைரம் மும்பையில் இருந்து விமானத்தில் ஏற்றப்பட்டது.
அப்போது, விமான நிலையத்தில் சரக்குகளை அடையாளம் தெரியாத ஒருவர், யாரும் கவனிக்காத நேரத்தில் ஒரு வைர பொட்டலத்தை திருடிச் சென்று விட்டார்.
களவுப் போன வைரத்தின் இந்திய மதிப்பு ரூ. 4 1/2 கோடி என்று போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஒருவரை மும்பை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், இந்த தகவலை உறுதிப்படுத்த போலீசார் மறுத்து விட்டனர்
0 கருத்துகள்:
Post a Comment