மிழ் திரையுலகின் பிபரல பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் காலமானார். அவருக்கு வயது 91. சுவாசக் கோளாறு காரணமாக சென்னை மயிலாப்பூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சில தினங்களாக சிகிக்சை பெற்று வந்தார். இந்நிலையில் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பிறபகல் 3.50 மணியளவில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறுகிறது.
1922ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மதுரையில் பிறந்தார் செளாந்தர ராஜன். திருவிளையாடல், பலே பாண்டியா, அம்பிகாபதி, பாசமலர், பச்சைவிளக்கு, மலைக்கள்ளன், நாடோடி மன்னன், பறக்கும் பாவை, ஆயிரத்தில் ஒருவன், பாகப் பிரிவினை, வசந்த மாளிகை, எங்க வீட்டுப் பிள்ளை போன்ற திரைப்படங்களில் பாடியிருக்கிறார்,எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி. ராமாராவ், எஸ்.எஸ். ராஜேந்திரன், நாகேஸ்வரராவ் உள்ளிட்ட பழம் பெரும் நடிகர்களுக்கு மட்டுமல்லாமல், ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டவர்களுக்கும் பின்னணி பாடியுள்ளார். பத்ம ஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ள சவுந்தரராஜன், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறுதி சடங்கு நாளை (26.05.13) நடைபெறுகிறது
இசை மேதைக்கு எமது இறுதி வணக்கங்கள்
0 கருத்துகள்:
Post a Comment