முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் மே 17 நிகழ்வின் நினைவு தினப் பொதுக்கூட்டம் பேரணி நடத்த நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், இந்தப் பேரணிக்கும் பொதுக்கூட்டத்துக்கும் காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. மேலும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிராபாகரன் படத்தைப் பயன்படுத்தியதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதனால், இந்த கூட்டத்தை உள்ளரங்கில் வைத்து நடத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்தது. அதன்படி தடை கடலூரில் சிதம்பரம் செல்லும் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் உள்ளரங்கு மாநாடாக இதனை நடத்துகின்றனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக்கும் கலந்து கொண்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே இந்தக் கூட்டம் தற்போது திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது
0 கருத்துகள்:
Post a Comment