Search This Blog n

06 May 2013

6 வயது சிறுமி கற்பழிப்பு: இளைஞன் கைது


ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுத்து ஏமாற்றி 6 வயது சிறுமியை கற்பழித்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே உள்ள கன்ஹான் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த திருமண விழாவுக்கு 6 வயது சிறுமி தனது பெற்றோருடன் சென்றிருந்தாள்.
அங்குள்ள மேல் மாடியில் உள்ள ஒரு அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்துவரும் ராகேஷ் என்கிற சக்ரதார் ஜெகோஜி பெலே (வயது 27) என்ற இளைஞன் விழாவில் அனைவரும் உற்சாகமாக இருந்த சமயத்தில் சிறுமிக்கு ஐஸ் கிரீம் வாங்கிக்கொடுத்து ஏமாற்றி அந்த வளாகத்தில் இருந்த மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அந்த சிறுமியை கற்பழித்துள்ளான். குறித்த சிறுமி படிக்கட்டு அருகே நின்று அழுது கொண்டிருந்த தகவல் கிடைத்து அவளது பெற்றோர் அங்கு வந்து விசாரித்தபோது தான் குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் கன்ஹான் பொலிஸில் முறைப்பாடு செய்தனர். இதனையடுத்து இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
 

0 கருத்துகள்:

Post a Comment