Search This Blog n

15 May 2013

கால் அமுக்க செய்த பள்ளி ஆசிரியர்:


ஜம்மு– காஷ்மீரில் மாணவர்களை கால் அமுக்கச் செய்த ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் கிர்ராம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பஷீர் அகமது பட்.
இவர் நாற்காலியில் அமர்ந்து மாணவர்களை கால் அமுக்கச் செய்து அதில் சுகம் கண்டது தொடர்பான புகைப்படம், சமூக வலைதளமான பேஸ்புக்கில் வெளியானது.
ஆசிரியரின் அதிகார துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்துவதற்காக பள்ளி உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதனையடுத்து ஆசிரியரை எதிர்த்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து ஆசிரியரை சஸ்பெண்ட் செய்த மாவட்ட கல்வி அதிகாரி சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டார்.
விசாரணை அறிக்கை இரண்டு நாட்களில் கிடைக்கும் என்றும், அதன்பின் ஆசிரியருக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்கல்வி அதிகாரி மேலும் கூறினார்
 

0 கருத்துகள்:

Post a Comment