சென்னையில் மாநகர பஸ்கள் செல்ல முடியாத பகுதிகளுக்கு மினி பஸ் விடப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதையொட்டி முதலில் 100 மினி பஸ்களை இயக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மினி பஸ்களை கட்டமைப்பதற்கான நிறுவனத்தை ஒப்பந்தம் மூலம் தேர்வு செய்யும் பணியை சாலைப் போக்குவரத்து நிறுவனம் (ஐஆர்.டி.) மேற்கொண்டது.
இதன் அடிப்படையில் மினி பஸ்களுக்கான 'சேசிஸ்' தயாரிக்கும் ஒப்பந்தம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்டது. இந்த நிறுவனம் இப்போது, மினி பஸ் சேசிஸ்களை தயாரித்து மாநகர போக்குவரத்து கழகத்திடம் ஒப்படைத்துள்ளது. இந்த சேசிஸ்களுக்கு பாடி கட்டும் பணி கரூரில் நடந்து வருகிறது.
இதுபற்றி போக்குவரத்து கழக உயர் அதிகாரி கூறியதாவது:-
சென்னையில் மினி பஸ்களை இயக்க அரசு வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தந்துள்ள பஸ்களுக்கு பாடிகட்டும் பணி நடந்து வருகிறது. இதுவரை 30 பஸ்களுக்கு பாடிகட்டப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் 20-ந்தேதிக்குள் இதற்கான பணிகள் அனைத்தும் முழுமையாக முடிந்து விடும்.
எனவே அடுத்த மாத இறுதியில் சென்னையில் மினி பஸ்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்க உள்ளார். இந்த மினி பஸ்களுக்கான கட்டணமும் குறைவாகவே இருக்கும் வகையில் நிர்ணயிக்கப்படும்

0 கருத்துகள்:
Post a Comment