குறைந்த பட்சம் மத்திய சட்டத்துறை அமைச்சர் அஷ்வின் குமார் பதவி விலகும் வரையாவது நாடாளுமன்ற கூட்டத்தொடரை புறக்கணிக்க போவதாகவும், மத்திய அரசின் வீழ்ச்சிக்கு கவுண்ட் டவுன் ஆரம்பமாகிவிட்டதாகவும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்,'ஆனால் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர மாட்டோம். விரைவில் நாடாளுமன்றத்துக்கு தானாகத் தேர்தல் வரும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா சுவராஜ் "சபாநாயகர் கூட்டும் கூட்டங்களைப் புறக்கணிக்க பாஜக முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் யார் கருத்துக்களையும் தெரிவிக்க விடாமல் சோனியா தடுத்து வருகிறார்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பிரச்சனையில் நான் பேசுவது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த முடிவு நாடாளுமன்றத்தில் செயல்படுத்தப்படவில்லை. சோனியா முடிவு செய்ததுதான் அமல் படுத்தப்பட்டது. நிதி மசோதா காலாவதி ஆவத்தைத் தவிர்க்கும் வகையில் அது நிறைவேற பாஜக ஒத்துழைப்பது என்றும் நாடாளுமன்ற அலுவல் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அந்த முடிவு நாடாளுமன்றத்தில் செயல்படுத்தப்படவில்லை. சோனியா முடிவு செய்ததுதான் அமல்படுத்தப்பட்டது.
சோனியா காந்திக்கு ஜனநாயக நடைமுறையில் நம்பிக்கை இல்லை, ஜனநாயக அமைப்புக்கள் மீது மதிப்பு இல்லை. இந்த அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது. அதே சமயத்தில் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவருவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. விரைவில் நாடாளுமன்றத்துக்கு தானாகத் தேர்தல் வரும். குறைந்த பட்சம் சட்டத்துறை அமைச்சர் அஷ்வின் குமார் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த விடமாட்டோம். நிலகரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ள கருத்துக்களைத்தான் ரொம்ப நாட்களாகவே நாங்களும் வலியுறுத்தி வருகிறோம்." என்று கூறியுள்ளார்.
இதேவேளை சோனியா காந்தி மீதான சுஷ்மாவின் குற்றச்சாட்டுக்கள் அநீதியானவை என காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. அவரது குற்றச்சாட்டுக்கள் நியாயமானவை அல்ல. அவற்றை முற்றாக நிராகரிக்கிறோம் என நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து புறக்கணிக்க போவதாக அவர் தெரிவித்திருப்பது கவலை அளிப்பதாகவும் சிதம்பரம் கூறியுள்ளார்.'ஆனால் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர மாட்டோம். விரைவில் நாடாளுமன்றத்துக்கு தானாகத் தேர்தல் வரும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:
Post a Comment