எந்த அணி வெற்றி பெறும், யார் முதலில் பேட்டிங் செய்வார்கள், அணியில் இடம் பெறும் வீரர்கள் யார், ஒரு அணியின் ஸ்கோர், வீரர்களின் சிக்சர், கைப்பற்றும் விக்கெட் என்று பல்வேறு வகையில் ஐ.பி.எல். பெட்டிங் (பந்தயம்) நடக்கிறது.
பணம் வைத்து நடத்தப் படும் இந்த பெட்டிங்குக்கு இநதியாவில் அனுமதி கிடையாது. சட்ட விரோதமாக இது நடத்தப்படுகிறது. மும்பையில்தான் அதிக அளவில் ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெறுகிறது. சென்னையில் சவுகார்பேட்டை பகுதியில் வசிக்கும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஐ.பி.எல். பெட்டிங்கில் ஈடுபடுகிறார்கள்.
மிகப் பெரிய அளவில் பணம் கிடைக்கும் என்பதால் இந்த சட்டவிரோத செயல்களை செய்கிறார்கள். இதில் பணத்தை சம்பாதிப்பவர்களும் உண்டு. அதைவிட நஷ்டம் அடைந்தவர்களும் உள்ளனர். ஐ.பி.எல். சூதாட்டத்தில் சவுகார்பேட்டை பகுதியில் சிலர் வீடு, நகையை இழந்து உள்ளனர்.
அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் அவர்கள் தங்களது உடமைகளை இழந்து பரிதவித்துள்ளார்கள். 22 வயது வாலிபர் ஒருவர் தனது மனைவியின் நகையை விற்று சூதாட்ட தரகரிடம் பெட்டிங் கட்டி பணத்தை இழந்து உள்ளார்.
அவர் கூறும்போது, 'எனது உறவினர் ஒருவர் கிரிக்கெட் பெட்டிங்கில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். எனது குடும்பத்தினர் செய்யும் செருப்பு வியாபாரத்தில் ஈடுபட எனக்கு விருப்பம் இல்லை. சூதாட்டத்தில் ஈடுபட்டு குறைந்த காலத்தில் அதிக அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும்.
எனது குடும்பத்தில் நான்தான் பணக்காரராக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். தற்போது மனைவியின் நகையை இழந்து நஷ்டப்பட்டு உள்ளேன்' என்றார். 27 வயதான வங்கி ஊழியர் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஏராளமான பணத்தை இழந்தார்.
அந்த பணத்தை கொடுப்பதற்காக ரூ.40 லட்சம் மதிப்புள்ள தனது வீட்டை விற்றுள்ளார். தற்போது அவர் வாடகை வீடடில் வசித்து வருகிறார். இனி ஒருபோதும் சூதாட்டத்தில் ஈடுபட மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்
0 கருத்துகள்:
Post a Comment