This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

31 March 2013

சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர் மன்றத்தினர் உண்ணாவிரதம்?

இலங்கை தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர் மன்றத்தினர் நாளை பாரிய உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்துகின்றனர். சுதந்திர தமிழ் ஈழத்துக்கான போராட்டம் வரலாறு காணாத அளவில் தமிழகத்தில் நடந்து வருகிறது. மாணவர்கள் முன்னெடுத்த இந்தப் போராட்டம் மக்கள் போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது. தனித் தமிழ் ஈழம் மலர வேண்டும். உலகெங்கும் பரவிக் கிடக்கும்...

பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை /

மத்தியப் பிரதேசத்தில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்த வழக்கு விசாரணை இன்று தொடங்க உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுலா வந்த சுவிட்சர்லாந்து நாட்டு தம்பதிகள், ஒரு கிராமம் வழியாக வந்த போது, ஒரு கும்பல் அப்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது. மார்ச் 15ம் திகதி கடந்த இந்த சம்பவத்தில், குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை இன்று சிறப்பு கூடுதல் மாவட்ட நீதிமன்ற...

புகார்: மாஜி அமைச்சர் கைது ???

வரதட்சணைப் புகாரில் சிக்கியதால், தலைமறைவாக இருந்த ஒடிசா மாநில முன்னாள் சட்ட அமைச்சர் ரகுநாத் மொஹந்தி, இன்று கைது செய்யப்பட்டார். அவருடன் இருந்த மனைவி ப்ரீத்தி லதாவை, ஒடிசா காவல்துறையின் மனித உரிமை பாதுகாப்பு குழு கைது செய்தது. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ரகுநாத் மொஹந்தியின், மருமகள் பர்சா ஸ்வோனி, தனது கணவரும், அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து மொஹந்தியின் மகன் ராஜாஸ்ரீ, கட்டாக் நகரில்...

28 March 2013

என் தலைமயின் கீழ் பாகிஸ்தான் செழிப்பாக இருந்தது:

இந்தியாவின் எல்லைக்குள் கடந்த 1999ம் ஆண்டு நுழைந்த பாகிஸ்தான் ராணுவம் கார்கில் பகுதியை ஆக்கிரமிக்க முயன்றபொழுது இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலால் பாகிஸ்தானின் முயற்சி தோல்வியில் முடிந்தது.இந்த தாக்குதல் நடைபெற்றபோது பாகிஸ்தான் ராணுவ தளபதியாக முஷரப் பதவி வகித்தார். சமீபத்தில் பாகிஸ்தான் திரும்பிய முஷரப்பிடம் இச்சம்பவம் தொடர்பாக நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், பாகிஸ்தானைப் பற்றியும் பாகிஸ்தானியர்களைப் பற்றியும் சிந்திப்பவர்களில்...

27 March 2013

ஜெயலலிதாவுக்கு சுப்பிரமணிய சுவாமி எச்சரிக்கை

முதல்வர் ஜெயலலிதா சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று விடுத்த கோரிக்கையால், அவரது ஆட்சியை இழக்க வேண்டிய நிலை உருவாகும் என என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி மிரட்டல் விடுத்துள்ளார்.இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது....

நடக்கும் ஐ.பி.எல்லில் இலங்கை வீரர்களுக்கு தடை,,,

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாடினால் பிரச்சினை மேலும் அதிகமாகும் சூழ்நிலை உருவாகும். எனவே, இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதினார். அதில், இலங்கை வீரர்களை சென்னை போட்டிகளில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று பி.சி.சி.ஐ.க்கு அரசு அறிவுறுத்த வேண்டும். இலங்கையைச் சேர்ந்த வீரர்கள், நடுவர்கள், அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று போட்டி அமைப்பாளர்கள்...

26 March 2013

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இரயில் முன் விழுந்து

பீகார் ரோடாஸ் மாவட்டத்தை சேர்ந்த கர்பிகாயா ரெயில்நிலையம் சராகத்தில் இரு சிறுமிகள் உள்பட 4 பேர் சரக்கு ரெயிலின் வீல்களில் நசுக்கப்பட்டு கிடந்தனர். தேவன்பூர் ஆளில்லா ரெயில் கேட் அருகே கிடந்த இந்த 4 பேரின் சடலங்களை ரெயில்வே பாதுகாப்பு பொலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. பின்னர் அவர்கள் வறுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என்கிற கோணத்தில்...

மாவட்ட நீதிபதிக்கு தர்மஅடி கொடுத்த மனைவி மீது,,

சத்தீஸ்கரில் மாவட்ட நீதிபதியொருவர், அவர் மனைவி மற்றும் உறவினர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மாவட்ட கோர்ட் நீதிபதியாக இருக்கும் அவினாஷ் திரிபாதி(வயது 33) கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரியங்கா என்ற பெண்ணை மணந்தார். இவர்களுக்கு ஆறு மாத குழந்தை உள்ளது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவினாஷ் மற்றும் பிரியங்கா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். நேற்று முன்தினம், தன் தாய்...

25 March 2013

அல்லாவை தவிர நான் வேறு யாருக்கும் பயப்படமாட்டேன்:,,,

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் (69). ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்த இவர் கடந்த 1999 முதல் 2008-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தார்.2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியை பிடித்தது. அதை தொடர்ந்து அவர் லண்டன் மற்றும் துபாய்க்கு நாடு கடத்தப்பட்டார். இந்த நிலையில் பாகிஸ்தானில் வருகிற மே 11-ந் திகதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. எனவே, அவர் இன்று மீண்டும் பாகிஸ்தான் திரும்ப திட்டமிட்டார். அவருக்கு...

24 March 2013

பூர்வகுடிகளின் நடைப்பயணம் வெற்றி

கனடாவில் ஐரோப்பியரின் வருகைக்கு முன் வாழ்ந்து வந்த பூர்வகுடிகள் ஏழு பேர், தங்களின் மொழி மற்றும் பண்பாட்டை வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய 1600 கிலோ மீற்றர் நடைபயணம் வரும் திங்களன்று நிறைவு பெறவுள்ளது.ஜேம்ஸ் வளைகுடா பகுதியிலுள்ள கியுபெக் மாநிலத்தில் வாப்மாகூஸ்ட்யூ(Whapmagoostui) என்ற இடமே கிரீ மொழி பேசும் கனடாப் பழங்குடியினரின் தாயகமாகும். கிரீ மொழியினரின் தாயகமான வாப்மாகூஸ்ட்யூ என்ற இடத்திலிருந்து கடந்த ஜனவரி மாதம் 16ம் திகதி...

23 March 2013

சசிகலாவின் சகோதரர் கைது,?,?,?

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.  திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரிஷியூர் கிராமத்தில் கஸ்தூரி என்பவரது வீடு இடிக்கப்பட்டது. இது சம்பந்தமான வழக்கு கடந்த ஆண்டு நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, சசிகலா சகோதரர் திவாகரன் உள்பட சிலரை பொலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆனார்கள். அந்த வழக்கு தற்போது நீடாமங்கலம் ஜூடீசியல்...

மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு .

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஆசிரியரை ஊர் மக்கள் ஒன்று கூடி தர்மஅடி கொடுத்தனர். பதினாறுபுதூரில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் ஜெயசந்திரன் என்ற அந்த ஆசிரியர் பாலியல் தொல்லை தருவதாக 5ம் வகுப்பு மாணவி ஒருவர் புகார் அளித்தார். இதுபற்றி தகவல் அறிந்த மாணவியின் பெற்றோரும், மற்ற மாணவிகளின் பெற்றோரும் பள்ளிக்கு திரண்டு வந்தனர். ஊர்மக்களும் இவர்களுடன் சேர்ந்து ஆசிரியர் ஜெயச்சந்திரனை...

அவதூறாக தகவல் வெளியிட்டவர் மீது ?

மறைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பற்றி அவதூறாக முகநூலில்(பேஸ்புக்) காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தகவல் வெளியிட்டார். புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊராட்சி தோழன்பட்டியைச் சேர்ந்த பாலையா என்பவரின் மகன் மனோஜ்(வயது 27), காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரகாகரன், அரை நிர்வாணமாக குளித்துக்கொண்டிருந்த பெண்ணை பிடிப்பது போல சித்தரித்த படத்தையும் அதை விளக்கி சில வாசகங்களையும் பேஸ்புக்கில் மார்ச் 22ம் திகதி இரவு வெளியிட்டுள்ளார். இவ்வாறு...

இந்தியரான யோகா குரு மீது மாணவி சில்மிஷ ,.,

அமெரிக்கா வாழ் இந்தியரான பிரபல யோகா குரு பிக்ராம் சவுத்ரி மீது முன்னாள் மாணவி செக்ஸ் புகார் கூறியுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள "பிவேர்லி ஹில்ஸ்" பகுதியில் யோகா மையம் நடத்தி வரும் பிக்ராம் சவுத்ரியிடம் முன்னாள் ஜனாதிபதிகளான ரொனால்டு ரீகன், பில் கிளின்டன் மற்றும் பொப் பாடகி மடோனா, நடிகர் ஜார்ஜ் க்ளூனி உள்ளிட்டோர் யோகா கற்றுள்ளனர். இந்நிலையில் பிக்ராம் சவுத்ரி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக அவரது முன்னாள் மாணவி சாரா...

விமானத்தின் இரண்டு டயர்கள் பஞ்சர்:உயிர் ???

அசாம் மாநிலம் திப்ருகர் விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றி வந்த விமானத்தின் இரண்டு டயர்கள் பஞ்சர் ஆன சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.மேற்கு வங்கமாநிலம் கொல்கத்தாவில் இருந்து இன்று ஏர் இந்தியா பயணிகள் விமானம், 90 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒன்று, அசாம் மாநிலம் திப்ருகர் விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானம் திப்ருகர் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, இரண்டு டயர்கள் பஞ்சர் ஆகிவிட்டன. ஆனால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விமான அதிகாரிகள்...

இத்தாலிய மாலுமிகள் இந்தியா திரும்பினர்

மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைதான இத்தாலி கடற்படை வீரர்கள் இருவரும் இந்தியாவில் நடக்கும் விசாரணைக்காக இந்தியா சென்றுள்ளனர். இத்தாலி தூதர், இந்தியாவில் இருந்து வெளியேறக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதும் இத்தாலியின் இந்த முடிவுக்கு ஒரு முக்கியக் காரணம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து கடந்த 11 நாள்களாக இந்தியா- இத்தாலி இடையே நிலவி வந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. அந்த இருவரும் இந்தியா திரும்ப உச்ச நீதிமன்றம் நேற்று வரை...

பீடாதிபதியாக ஜயேந்திரர் பதவியேற்ற வைர ?

காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதிபதியாக ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பதவியேற்ற 60வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதிபதியாக இருந்து வருபவர் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவர் கடந்த 1954ம் ஆண்டு மார்ச் 22ம் திகதி காஞ்சிபுரத்தில் உள்ள சர்வதீர்த்த குளத்தின் அருகே துறவறம் பூண்டார். அப்போது பரமாச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், இவருக்கு ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என பெயர் சூட்டி காஞ்சி மடத்தின்...

ரத்தத்தை உணவில் கலந்து சாப்பிடும் விநோத ?

அமெரிக்காவில் கலிபோர்னியா நகரைச் சேர்ந்த பச்சை குத்தும் கலைஞர் மிஷெல்(வயது 29) என்பவர் வாரத்திற்கு 36 லிட்டர் பன்றி ரத்தம் குடிப்பதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்துள்ளார்.இது குறித்து மிஷெல் கூறுகையில், பன்றி ரத்தம் மட்டுமின்றி வாரத்திற்கு ஒரு முறை மனித ரத்தத்தையும் குடிப்பதாகவும், ரத்தத்தை உணவோடு கலந்தும் சாப்பிடுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், சிலருக்கு சிகரெட் பிடிப்பது போல் எனக்கு ரத்தம் பிடித்திருக்கிறது என்றும்...

20 March 2013

போர்குற்றவாளியாக அறிவிக்கவேண்டும்: மாணவர்களின்

போர்குற்றவாளியாக அறிவிக்கவேண்டும்: மாணவர்களின் இலங்கை விவகாரத்தை முன்வைத்து நாளுக்கு நாள் தமிழகத்தில் வலுத்து வரும் மாணவர்கள் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மாணவர்களுடன் பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால், இலங்கை விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது. இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கை இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி...

18 March 2013

கூகுள் இணையதள நிறுவனத்தின் "ஆண்ட்ராய்டு" பிரிவின்

கூகுள் இணையதள நிறுவனத்தின் "ஆண்ட்ராய்டு" பிரிவின் பிரபல கூகுள் இணையதள நிறுவனத்தின் "ஆண்ட்ராய்டு" பிரிவின் தலைவராக இந்தியர் சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். மொபைல் போன்கள் மற்றும் சிறிய வகை மடிக்கணனிகளை பயன்படுத்த உதவும் ஆபரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்டு, 2008ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. தற்போது உலகில் உள்ள ஸ்மார்ட் போன்களில் மூன்றில் ஒரு பங்கு போன்கள் ஆண்ட்ராய்டு மூலம் இயங்குகின்றன. இலவச மென்பொருளான ஆண்ட்ராய்டு, முன்னணி...

17 March 2013

ஊழலை ஒழித்து நல்லாட்சியை வழங்க வேண்டும்:

இந்தியாவின் பிரதமராகும் எண்ணம் உங்களுக்கு உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த நரேந்திர மோடி கூறியதாவது: இன்னாரைப் போல் உருவாக வேண்டும் என்று என் வாழ்க்கையில் இதுவரை எண்ணியதே கிடையாது. ஏதாவது செய்ய வேண்டும் என எப்போதுமே முயற்சித்துள்ளேன்.  பெரும்பாலும், யாரைப்போலாவது, ஆளாகி இறப்பதையே மக்கள் வுரும்புவார்கள். இதை நான் பின்பற்றியதே கிடையாது. குஜராத்தின முதல் மந்திரியாக பதவி ஏற்கும் வரை இதைப்பற்றி நான் கனவிலும் எண்ணியது இல்லை. நான் முதல் மந்திரி...

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ///

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க  கூட்டம் நேற்று இரவு  நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜரத்தினம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.,ஏ. சுந்தரம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது: தற்போதைய பட்ஜெட் இளைஞர்கள், பெண்கள், ஏழைகள் என்ற முகங்களை நினைவில் கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது. உலக பொருளாதார அறிஞர்கள் இந்த பட்ஜெட் மூலம் இந்தியா பொருளாதார வளர்ச்சியினை...

இலங்கை விடயம் தொடர்பாக மத்திய அரசுக்கு ?

தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- நேற்றைய தினம் நீங்கள் மத்திய அரசு பற்றி ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறீர்கள்; அதற்கு மத்திய அரசிடமிருந்து ஏதாவது பதில் வந்துள்ளதா?. பதில்:- இதுவரையில் வரவில்லை. வந்தால் உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். கேள்வி:- மத்திய அரசிடம் பல நாட்களாக...

: மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் ,,,

இலங்கையில் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் மாணவர்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 8-ந் திகதி லயோலா கல்லூரி மாணவர்கள் 18 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியதும் மற்ற கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் தீயாக இது பரவியது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உண்ணாவிரதம்,...

15 March 2013

கடவுள் துகள்: விஞ்ஞானிகள் திணறல்,,,

அணு ஆராய்ச்சி குறித்த செயல்பாடுகளில், முக்கியப் பங்கு வகிக்கும் ஐரோப்பிய நிறுவனமான லார்ஜ் ஹர்டன் கோலிடர் 1998ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.இந்த மையத்தில், அணுவின் அடிப்படையை கண்டுபிடிப்பது தொடர்பான ஆராய்ச்சிகளில் அட்லாஸ், சி.எம்.எஸ் என்ற இரு பிரிவில், விஞ்ஞானிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய ஆராய்ச்சிகளுக்கு அடிப்படையாக அமைந்தது கடந்த 1960ம் ஆண்டில் ஸ்காட்லாண்டு நாட்டைச் சேர்ந்த இயற்பியல் வல்லுனரான பீட்டர் இகிசு எழுதிய...

13 March 2013

இலங்கை - இந்தியா - அமெரிக்கா கூட்டுச் சதி! -

ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்படும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்ற ஒற்றைக் குரல் முழக்கம் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கிறது. அதே நேரத்தில், 'இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் உப்புசப்​பில்லாத தீர்மானத்தால் எந்தப் பலனும் இல்லை’ என்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன். கேள்வி: அமெரிக்கா கொண்டு​வரும் தீர்மானம் தமிழர்களின் கோரிக்கைக்கு வலுசேர்க்குமா?பதில்:  ராஜபக்ச அரசுக்கு எதிராக ஐ.நா. சபையின் மனித உரிமை​கள் ஆணையக்...

12 March 2013

இனப்படுகொலையை கண்டித்து முழு அடைப்பு ?

டெசோ அமைப்பு சார்பில் தமிழகம் மற்றும் புதுவையில் முழு அடைப்பு போராட்டம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இலங்கை அரசின் தமிழ் இன படுகொலை தொடர்பாக ஐ.நா.சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. இதையொட்டி காலை 6 மணி முதல் தனியார் பேருந்துகள் புதுவையில் இயங்கவில்லை. இம்மாநிலத்தை பொருத்தவரை தனியார் பேருந்துகளே அதிகம் என்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். அதேவேளையில் புதுவை அரசு போக்குவரத்து...

11 March 2013

கறுப்பு நிறமுடைய ஒரு அமெரிக்க இந்தியர் ஒமாபா பதவிக்கு???

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு நான் நிற்கப்போகிறேன் என்று அமெரிக்க இந்தியர் பாபி ஜிண்டால் கூறியுள்ளார். அமெரிக்க வாழ் இந்தியரும், லூசியானா கவர்னருமான பாபி ஜிண்டாலின்(வயது 41) சமயோசித புத்தியைப் ஒபாமா புகழ்ந்துள்ளார். எதிர் வரும் 2016-ம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளாராக இரண்டாவது முறையாக கவர்னராக தெரிவு செய்யப்பட்டுள்ள பாபி ஜிண்டால் இருப்பார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் அங்கு நடைபெற்ற விருந்து...

09 March 2013

மாணவிக்கு வீரமங்கை விருது வழங்கிய அமெரிக்கா?

டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு அமெரிக்க அரசின் சர்வதேச வீர மங்கை விருது வழங்கப்பட்டது.தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு அரசின் சர்வதேச வீர மங்கை விருது வழங்கப்பட்டது. இவ்விருதை அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமாவும் வழங்கினார்கள்.மாணவியின்...

08 March 2013

குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ?

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலியான 17 பேரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. மேலும், தீவிரவாதம், மாவோயிஸ்ட் தாக்குதல்களால் கொல்லப்படும் நபர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் சட்ட முன்வடிவிற்கும் அமைச்சரவை அனுமதி அளித்ததோடு மேற்குறிப்பிட்ட தாக்குதல்களினால் நிரந்தர ஊனமுற்றவர்களுக்கும் இந்த சட்டம்...

07 March 2013

மாலிப்போரில் நான்காவது பிரெஞ்சு வீரர் மரணம்

மாலியின் இசுலாமியவாதிகளை அகற்றும் போரில் அந்நாட்டு ராணுவத்துக்கு துணையாக இருக்கும் பிரெஞ்சு ராணுவத்தில் ஒரு வீரர் நேற்று வீரமரணம் அடைந்துள்ளார்.பிரான்சு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் வால்போன்(Valbonne) என்ற இடத்தில் முகாமிட்டிருந்த ராணுவப் பிரிவைச் சேர்ந்த வீரர் ஒருவர் கிழக்குமாலியில் காஓ நகருக்கு 100 கிலோ மீற்றர் தொலைவில் நடந்த போரில் உயிரழந்தார் என்பதைத் தெரிவித்துள்ளது. வீரமரணம் அடைந்தவரின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் ஜனாதிபதி ஹோலாண்ட்...

கதிர் வீச்சு ஏற்பட வில்லை: இலங்கைக்கு ???

கூடங்குளம் அணு உலையில் கதிர் வீச்சு ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஊடகங்களில் வெளியான செய்திக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள கூடங்குளம் அணு உலையில் கதிர்வீச்சு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது என்றும் முற்றிலும் தவறானது என்றும் கொழும்பிலுள்ள இந்தியா தூதரகம் மறுத்துள்ளது. கூடங்குளம் அணு உலை அதி நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், தற்போது பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பரிசோதனைகள்...

06 March 2013

விஐபிக்களின் தொலைபேசி உரையாடல்கள்

அரசியல் மற்றும் சமூகவிரோத செயல்களைத் தவிர்க்கும் வகையில் நாடு முழுவதிலும் 9600 விஐபிக்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டு அவர்களது பேச்சுக்கள் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல 1100 இமெயில் கணக்குகளும் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது. மத்திய அரசு சார்பில் முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து ஆய்வு செய்ய உயர்நிலை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது....

05 March 2013

மறைந்த டெல்லி மாணவிக்கு அமெரிக்க,.,

டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு அமெரிக்கா வீரமங்கை விருது வழங்க உள்ளது. சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ம் திகதி இந்த விருதை, அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி ஆகியோர் வழங்க உள்ளனர். உயிரிழந்த மாணவி, தனது மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள தைரியமாக போராடியதாகவும், காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் குற்றவாளிகள் ஆறு பேருக்கும் உரிய தண்டனை வழங்க வலியுறுத்தியதையும்...

04 March 2013

பிரிவினர் மீது நடந்த குண்டுத் தாக்குதலில்

பாகிஸ்தானின் சிந்து மாகாண தலைநகர் கராச்சியில் நேற்று நடந்த பயங்கர குண்டு வீச்சு தாக்குதலில் 48 பேர் பலியாகியதோடு 140க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாகிஸ்தானில் வசிக்கும் ஷியா பிரிவினரை குறிவைத்து சமீப காலமாக கொலைவெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் மக்கள் தொகையில் 20 சதவீதமாக இருக்கும் ஷியா பிரிவினர் மீது அவ்வப்போது போராளிகள் நடத்திய தாக்குதல் சம்பவங்களில் கடந்த (2012) ஆண்டில் மட்டும்...

03 March 2013

பிரெஞ்சு படைகள்: முக்கிய ஜிகாதி சுட்டுகொலை

மாலி நாட்டில் அல்கொய்தா தீவிரவாதிகள் அந்நாட்டின் ஜனாதிபதி ஆட்சிக்கு எதிராக பெரும் கலகத்தில் ஈடுபட்டு வருகின்றன.இதனால் அரசு படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போரில் மாலி அரசுக்கு ஆதரவாக பிரெஞ்சு படைகள் களமிறங்கியது. இந்நிலையில் சாட் ராணுவம் நேற்று இபோகஸ் மலையிலுள்ள அல்கொய்தா ஜிகாதிகளின் முக்கிய இடமான அட்ரார் பகுதியைத் தாக்கியபொழுது இதில் அவர்களின் கொமாண்டர் மொக்டார் பெல்மொக்டார் உள்ளிட்ட பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று...

01 March 2013

இன்று தளபதிக்கு பிறந்தநாள் ,,,,

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தனது 60 வது பிறந்த நாளை ஒட்டி தொண்டர்களிடம் வாழ்த்து பெற்றார். இன்று காலை 9.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையிலுள்ள YMCA மைதானத்திற்கு தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்த அவர் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் கேக்கை வெட்டினார். அதனைத்தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் வாழ்த்து பெற்று வருகிறார். தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மகளிர் அணி மற்றும் இளைஞர் அணியையை...

இந்தியாவின் புதிய பட்ஜெட் வாசிக்கையில்,,,

நாட்டின் புதிய பட்ஜெட் வெரும் கண்துடைப்பு என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்ற நிலையில் சில சுவாரஸ்யமான சம்பங்களும் அவையில் அரங்கேறியுள்ளன. மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் ப.சிதம்பரம், பாலியல் வன்கொடுமைக்கு பலியான டெல்லி மாணவியை நினைவுபடுத்தும் வகையில் நிர்பயா நிதியம் தொடங்குவதாக அறிவித்தபோது, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பேதமின்றி பெண் எம்.பி.கள் தங்களது வரவேற்பை தெரிவித்தனர். பெண்களுக்கென தனி வங்கிகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்புக்கு...

தேடப்பட்டுவரும் 109 தீவிரவாதிகளின் பெயர்களை``

   உலகில் வன்முறை நடக்கும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. பாகிஸ்தான் அரசு, லஷ்கர் இ ஜங்க்வி, தெஹ்ரீ இ தலிபான், ஜெய்ஸ் இ முகமது மற்றும் ஷியா முஸ்லிம் இயக்கங்களான தெஹ்ரீ இ ஜாப்ரியா, ஷிபா இ முகமது ஆகிய தீவிரவாத இயக்கங்களில் உள்ள 109 தீவிரவாதிகளின் பெயர்களை தேடப்படும் குற்றவாளிகளாக பட்டியலிட்டுள்ளது. அதில், 2002-ம் ஆண்டு கராச்சி ஷெராட்டன் ஹோட்டலில் தங்கியிருந்த 11 பிரெஞ்ச் என்ஜினியர்கள் கொல்லப்பட்ட வழக்கிலும், 2004-ம் ஆண்டு பிரதமராக இருந்த...