அரசியல் மற்றும் சமூகவிரோத செயல்களைத் தவிர்க்கும் வகையில் நாடு முழுவதிலும் 9600 விஐபிக்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டு அவர்களது பேச்சுக்கள் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. |
அதேபோல 1100 இமெயில் கணக்குகளும் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு
இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது. மத்திய அரசு சார்பில் முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து ஆய்வு செய்ய உயர்நிலை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜித் சேத் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவினர் நாடு முழுவதும் 9600 விஐபிக்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டு பதிவு செய்துள்ளனர். இதற்காக 8 ஏஜென்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 1100 இமெயில் கணக்குகள், இணையதளங்களின் நடவடிக்கைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பரில் மொத்தம் 10,490 விஐபிக்களின் தொலைபேசிகள் பதிவு செய்யயப்பட்டன. இது டிசம்பரில் 9600 ஆக குறைந்துள்ளது. மத்திய உளவுப்பிரிவு (ஐ.பி) இதற்கான பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் மேலும் 2 ஆயிரம் முக்கிய பிரமுகர்களின் தொலைபேசிகளும் கண்காணிக்கப்பட வேண்டியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.யின் நேரடி கண்காணிப்பில் தற்போது 5,300 தொலைபேசிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது |
0 கருத்துகள்:
Post a Comment