This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

30 December 2015

10 நாட்களில் 1 லட்சம் டன் குப்பைகள் அகற்றல் ஓரிரு நாட்களில் தூய்மைப்படுத்தும்

சென்னையை தூய்மைப்படுத்தும் பணியில் கடந்த 10 நாட்களில் 1 லட்சம் டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளது. ஓரிரு நாட்களில் பணிகள் நிறைவு பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  தூய்மைப்படுத்தும் பணி தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, சென்னையில் மழை வெள்ள நிவாரண பணிகள் மற்றும் சுகாதார பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. திடக்கழிவு மேலாண்மைத்துறையும், பொது சுகாதாரத்துறையும் இணைந்து போர்க் கால அடிப்படையில் அனைத்து  பணிகளையும் செய்து  வருகிறது....

29 December 2015

சட்” என்று கோபப்படும் ஒரு சராசரி கணவர்ளில்நானும் .ஒருவர் ?

சாப்பாடு சரியில்லை என்றால் “சட்” என்று கோபப்படும் ஒரு சராசரி கணவன்தான் நான்...!  காலையில் கூட சப்பாத்தி மென்மையாக இல்லை என்பதை, கொஞ்சம் மென்மை இல்லாத வார்த்தைகளை உபயோகித்தே என் மனைவியிடம் என்னால் சொல்ல முடிந்தது...! ஆனால்...முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை இன்று தற்செயலாக நாளிதழில் படிக்க நேரிட்டது. இதோ... அப்துல் கலாமின் வார்த்தைகளில், அவரது இளமைக்கால  வாழ்க்கை : "நான் சிறுவனாக இருக்கும்...

28 December 2015

சல்மான்கான் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் விடுதலை!!!

கடந்த 2002ல் இந்தி நடிகர் சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டியதில் ஒருவர் பலியான வழக்கில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை செஷன்ஸ் (கீழமை) நீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு, மே மாதம் தீர்ப்பு வழங்கியது.  ஆனால் அந்த தீர்ப்பை ரத்து செய்த மும்பை  உயர் நீதிமன்றம் , போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி சல்மான்கானை விடுதலை செய்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை கிளப்பியது நடிகர் சல்மான்கான், 2002 ஆம் ஆண்டு ஒரு விருந்து நிகழ்ச்சியில்...

22 December 2015

யார் காந்தியாரைக் கொன்றவன் அசல் ஆர்.எஸ்.எஸ்...இல்லையா ???

காந்தியாரைக் கொன்றவன் அசல் ஆர்.எஸ்.எஸ்.காரனே என்பது உலகத்திற்கே தெரியும். ஆனால், பி.ஜே.பி.க்காரர்கள் ஒன்றைத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நீதிமன்றமே சொல்லி விட்டது. நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரரல்ல என்று; அதற்குப் பிறகும் கோட்சேவை ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லுவது நியாயம் தானா? என்று பெரிய புத்திசாலிகள் போலவும், கேள்வி கேட்ட வர்களை மடக்கி விட்டது போலவும் சட்டையின் கழுத்துப் பட்டையைச் சற்றுத் தூக்கி விட்டு நடை போடுகிறார்கள். காந்தியாரைக்...

20 December 2015

வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த 35 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன

சென்னையில் வராலாறு காணாத மழையால் சிக்கி தவிக்கின்றனர் மக்கள். வெள்ளப்பெருக்கில்  சிக்கி உயிரிழந்த 35 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை, வெள்ளத்தால்  சென்னை நகரமே தீவுகளாகி துண்டாகிப் போனது. மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்புகிறது சென்னை. அதேநேரத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களும் அடுத்தடுத்து மீட்கப்பட்டு  வருகிறது. இன்று மட்டும் மொத்தம் 35 சடலங்கள் சென்னை ராயப்பேட்டை அரசு...

19 December 2015

சுஸ்மா சுவராஜ் கூற்று புதிய அரசாங்கம் பெறுமதியான பங்காளி இந்தியா?

இலங்கையின் புதிய அரசாங்கம், இரு நாட்டு உறவை விருத்தி செய்து கொள்வதில் பெறுமதியான பங்காளியாக செயற்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இதனை தெரிவித்துள்ளார்.  புதுடில்லியில் நேற்று நிகழ்வு ஒன்றில்  உரையாற்றிய அவர், இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் இந்தியா, இலங்கையுடன் இணைந்து செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றபோது அயல்நாடுகளின் தலைவர் அழைக்கப்பட்டமை முதல்...

17 December 2015

கடலரிப்புக்கான தடுப்புச் சுவர் அமைக்கும் கோரிக்கை திருப்பி அனுப்பப்பட்டது;?

எண்ணூர் - எர்ணாவூர் இடையே கடலரிப்புக்கான தடுப்புச் சுவர் அமைப்பது தொடர்பாக சுற்றுப்புறசூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை திருப்பி அனுப்பப்பட்டதாக பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. ஒருங்கிணைந்த திட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கடல் அரிப்பைத் தடுப்பதற்காக அரசு அறிவியல் பூர்வமான தீர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்படவில்லை. எனவே தற்போது மேற்கொள்ளும் முறையை தடை செய்து உத்தரவிட வேண்டும் என்று...

10 December 2015

புராதன சின்னங்களை பாதுகாக்க தனிச்சட்டம் இல்லையே? ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை

தொன்மையான நாகரீகம், பழமையான கட்டிடங்கள் பல இந்தியாவில் இருந்தும், இவற்றை பாதுகாக்க தனிச்சட்டம் இதுவரை உருவாக்கப்படவில்லையே? என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  குழு அமைப்பு  தமிழகத்தில் புராதன சின்னங்களை முறையாக பராமரிக்க நிபுணர் குழுக்களை அமைக்கவில்லை என்று பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. பின்னர், தமிழகத்தில் உள்ள கோவில்கள், புராதன...

08 December 2015

நிவாரண நிதியாக திருமண செலவை வழங்கும் “காதல் நாயகி“ சந்தியா

காதல் பட நாயகி சந்தியாவின் திருமணம் மிக எளிமையான முறையில் கேரளாவில் நடந்தது.  காதல் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான சந்தியா, மலையாளம்- தெலுங்கு படங்களிலும்  நடித்துள்ளார். இவருக்கு சென்னை அசோக்நகரை சேர்ந்த ஐ.டி பொறியாளர் வெங்கட் சந்திரசேகரன் என்பவரும் திருமணம் நிச்சயமானது. இவர்களது திருமணம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெறுவதாக இருந்த நிலையில், கனமழை காரணமாக இவர்கள் குடியிருந்த பகுதியில் வெள்ளத்தில் சிக்கியது. இதனையடுத்து...

07 December 2015

இடியுடன் கூடிய கனமழை சென்னையில் டிசம்பர் 9-ம் திகதி முதல் பெய்யும் !!!

சென்னையில் டிசம்பர் 9-ம் திகதி முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று பி.பி.சி. தொலைக்காட்சியின் வானிலை பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் பி.பி.சி.யின் வானிலை பிரிவு, சென்னையில் 3 நாட்கள் கனமழை தொடரும் என்றும், மழையளவு 50 செ.மீட்டர் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி சென்னையில் கனமழை பெய்தது. இந்த நிலையில், தமிழகம் அருகே தென் மேற்கு வங்க கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி...

05 December 2015

இந்தியாவிலும் இலங்கையிலும் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை மூழ்கும் அபாயம்!

 இப்போ பெய்த மழையைவிட பலமடங்கு மழைக்கு வாய்ப்பு என தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஜப்பானிய வான்வெளி ஆய்வு முகவர் ஒருவரும் நாசாவும் வெளீயிட்டுள்ள அறிக்கையின்படி சென்னையில் பெய்வது மழை அல்ல  EL Nino சூழற்சிப்  புயல் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 250 Cm வரைக்கும் பெய்த இந்த சுழற்சிப் புயல் மீண்டும் சென்னையை தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையே முழுகி போக வாய்ப்புக்கள்...

04 December 2015

வழமைக்கு திரும்புகின்றது சென்னை மழை:ஓய்ந்தது

தொடர்ந்து சில நாட்களாக பெய்யும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் தண்ணீரில் தத்தளித்து வந்த சென்னையில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதுடன் பல பகுதிகளில் வெள்ளநீர் வடிந்து  வருகிறது.  செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாலும், மழை ஓய்ந்துள்ளதாலும் பல இடங்களில் வெள்ளநீர் வடிந்து வருகிறது. அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கடந்த 2 நாட்களாக சைதாப்பேட்டை பாலத்தில் போக்குவரத்து...

03 December 2015

மழையால் இந்திய இலங்கை விமானங்கள் இரத்து

கொழும்பிற்கும் – சென்னைக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் இன்று வியாழக்கிழமையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ்  அறிவித்துள்ளது. சென்னையில் நிலவும் அதிக மழையுடன் கூடிய வானிலையால் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும்மழை காரணமாக தமிழகத்தின் சென்னை சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் ஸ்ரீலங்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பயணிகள் சிரமங்களை  எதிர்நோக்கியுள்ளனர். கொழும்பில்...

02 December 2015

நவம்பர் மாத மழை: நூலிழையில் தவறவிட்ட சென்னை!

சென்னை இந்த நூற்றாண்டில் நவம்பர் மாதத்தில் அதிக மழை பொழிவு என்ற வரலாற்று சாதனையை நூலிழையில்  தவறுவிட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 28-ம் திகதி தொடங்கிய நிலையில், சென்னையில் நவம்பர் மாதத்துகான மழைப்பதிவு 1049.3 மி.மீ பதிவாகியுள்ளது. இது, இந்த நூற்றாண்டில் இரண்டாவது முறையாக நவம்பர் மாதத்தில் சென்னையில் பெய்த அதிக  மழையளவு ஆகும். இதற்கு முன்னதாக கடந்த 1918-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் 1088.4 மிமீ மழை...

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கு இன்று தீர்ப்பு”!

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிராக மத்திய அரசினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது. ஆகவே, தமிழகம் மட்டுமின்றி நாடு முழுதும் இந்த தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யப் போவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த முடிவை எதிர்த்து அப்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு...

30 November 2015

விசேட சோதனை மாலைதீவு பிரஜைகள் மீது இல்லை???

இலங்கைக்கு செல்லும் மாலைதீவு பிரஜைகள் மீது விசேட சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று மாலைதீவில் உள்ள  இலங்கை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக மாலைதீவின் பிரஜைகள் இலங்கையில் கைதுசெய்யப்பட்டமை மற்றும் ஒருவர் கொலை செய்யப்பட்டமையை அடுத்து கட்டுநாயக்கவில் மாலைதீவு பிரஜைகளுக்கு சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள்  வெளியாகியிருந்தன. எனினும் இதனை மறுத்துள்ள மாலைதீவின் இலங்கை உயர்ஸ்தானிகரகம், மாலைதீவில் இருந்து எடுத்து...

28 November 2015

பாஸ்தாவில் அதிகளவு ரசாயனம் : மீண்டும் சிக்கிய நெஸ்லே நிறுவனம்

நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றான நெஸ்லே பாஸ்தாவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு ரசாயன பொருட்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தர பிரதேசம் மாநிலத்தின் மாவ் பகுதியில் உள்ள விநியோகஸ்தர் ஒருவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட நெஸ்லே பாஸ்தா பாக்கெட்டுகள், அம்மாநில அரசுக்கு சொந்தமான உணவு தர பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. இந்த ஆய்வக பரிசோதனையின் முடிவில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட நெஸ்லே பாஸ்தாவில் ரசாயன பொருட்கள் இருந்தது...

27 November 2015

முதல் இடம்:உடல் உறுப்பு தானத்தில் தமிழகத்திற்கு விருது

நாட்டிலேயே உடல் உறுப்பு தானத்தில்  முதல் இடம் வகிப்பதற்காக தமிழகத்திற்கு விருது வழங்கபட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற விழாவில்  மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா தமிழகத்திற்கான விருதை அமைச்சர் விஜய பாஸ்கரிடம் வழங்கினார். உடல் உறுப்பு தானம் செய்வதில் ஆந்திர மாநிலம் இரண்டாவது இடத்தில்உள்ளது  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

மாவீரர் தின நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மாவீரர் தின நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரர் தின நிகழ்ச்சி பல்வேறு நாடுகளில்  நவம்பர் 27 ம் தேதி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு தமிழ்நாட்டில் நடத்த அனுமதி கோரி மதிமுக, நாம் தமிழர் கட்சி, திராவிடர் விடுதலை  கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இலங்கையில் உள்நாட்டு...

மழை கொட்டப்போகுது..நவம்பர் 28,29ம் தேதிகளில். ஜாக்கிரதை!!!:

சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழ்நாட்டில் 28,29 தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிமை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . 12 முதல் 24 செமீ வரை மழை பெய்யும்  என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலைகளினால் தமிழகத்தில் கடந்த 20 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது.  இந்த மழையால்  தமிழகமே வெள்ளக்காடக...

25 November 2015

வங்கிக் கணக்கு குறித்து விசாரணை- சுவிட்சர்லாந்து அரசிடம் உதவி கோருகிறது இந்தியா?

காங்கிரஸ் மூத்த தலைவர் பிரனீத் கவுரின் சுவிட்சர்லாந்து வங்கி கணக்குகளின் விவரங்களை அளிக்குமாறு அந்த நாட்டு அரசிடம் இந்தியா உதவி கோரியுள்ளது. சுவிட்சர்லாந்தின் எச்.எஸ்.பி.சி. வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள 628 இந்தியர்கள் குறித்த பட்டியலை சில ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் அரசு இந்தியாவிடம் அளித்தது. அந்தப் பட்டியல் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக...

குரோம்பேட்டை அரச மருத்துவமனை நோயாளிகள் வெள்ளத்தில் :அவதி!!!

சென்னையில் திங்கள்கிழமை பெய்த கனமழை காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவனை வெள்ளநீரில்  மிதந்தது. சென்னையில் திங்களன்று பெய்த கனமழை காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனையடுத்து நோயாளிகளை மருத்துவர்களும் பிற ஊழியர்களும் சேர்ந்து வேறு வார்டுகளுக்கு மாற்றினர். றநோயாளிகள் பகுதி முழுதும் நீரில் மூழ்கியதாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பலரும்  தெரிவித்தனர்.  இதனையடுத்து பல்லவபுரம் நகராட்சி தேங்கியுள்ள...