This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

31 May 2015

வெயிலில் பலியானோர் எண்ணிக்கை 1826 ஆக அதிகரிப்பு!

இந்தியா முழுவதும் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1826-ஐ தாண்டியுள்ளது. இதில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மட்டும் 960 பேர் பலியாகி உள்ளனர். கோடை வெயில் இன்றோடு முடிவடையும் நிலையில் கடந்த ஒரு வாரமாக உச்சகட்ட வெயில் வாட்டி  வதைத்து விட்டது.  ஓடிசா மாநிலத்தில் 43 பேர், குஜராத்தில் 7 பேர், தலைநகர் டெல்லியில் 2 பேரும் வெயிலுக்கு பலியாகி உள்ளனர். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 960 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் நேற்று ஒருநாளில்...

85 ஆண்டுகளில் எவரெஸ்ட் பனிச்சிகரம் உருகி விடும்???

புவி வெப்பமடைதல் காரணமாக, வரும் 2100ம் ஆண்டுக்குள், எவரெஸ்ட் பனிச்சிகரம் முற்றிலும் உருவி விடும் என்று, ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். புவி வெப்பமடைதல் என்பது, சர்வதேச நாடுகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக தற்போது உருவெடுத்துள்ளது. காடுகள்  அழிப்பு, தொழிற்சாலை பயன்பாடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் புவி வெப்பமடைதல் ஏற்படுகிறது. இந்த நிலையில், புவி வெப்பமடைவதால், உலகின் உயர்ந்த பனிச்சிகரமான எவரெஸ்ட்டில் (8,848...

28 May 2015

மீனவர் விவகாரம் - சிறிலங்கா அமைச்சருக்கு இந்தியா கண்டனம்

தமிழக மீனவர்களின் கோரிக்கை தொடர்பில் சிறிலங்காவின் மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர விடுத்திருந்த கருத்துக்கு, இந்திய அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.  இந்திய வெளிவிவகார அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  65 நாட்கள் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்குமாறு தமிழக மீனவர்களால் கோரப்பட்டிருந்தது. எனினும் இதனை மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர மறுத்ததுடன், 65 நிமிடங்களேனும் தமிழக மீனவர்களுக்கு...

27 May 2015

விமானநிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது|||

இந்தியாவின் ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் போலி கடவுச்சீட்டுடன் பயணிக்க முற்பட்ட இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்த இலங்கையர் எனத் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் சிவா என்பவரிடம் 50,000 ரூபாய் பணம் கொடுத்து போலி கடவுச்சீட்டு தயாரித்து கொடுக்கும்படியும் தன்னை சுவிட்ஸர்லாந்துக்கு அனுப்பி வைக்கும்படியும் கூறியுள்ளதாக தெரிகிறது. அவ்வாறே போலி கடவுச்சீட்டை தயாரித்த சிவாவும்,...

22 May 2015

பொதுத்தேர்வு: பிறமொழியில் 500/500 மதிப்பெண்கள் பெற்று 5 பேர் முதலிடம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்காண முடிவுகளை 21.05.2015. காலை 10 மணிக்கு டி.பி.ஐ. வளாகத்தில் அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 41 மாணவ- மாணவிகள் 499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர். இரண்டாம் இடத்தை 498 மதிப்பெண்கள் பெற்று 192 மாணவ-மாணவிகளும், 497 மதிப்பெண்கள் எடுத்து 540 மாணவ-மாணவிகளூம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர். மொத்த...

21 May 2015

8 வயது சிறுமி மோடிக்கு எழுதிய கடிதம்???

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி தனது சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆக்ராவைச் சேர்ந்த தையபா (Taiyyaba) என்ற 8 வயது சிறுமி 3ம் வகுப்பு படித்து வருகிறார். பிறவியில் இருந்தே இதயக் கோளாறால் (congenital heart disease) பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்க பணம் இல்லாமல் கூலி வேலை செய்யும் அவரது தந்தை மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். சிறுமியின் சிகிச்சைக்கு ரூ.15 முதல் 20 லட்சம் தேவைப்படும் என்றும்,...

19 May 2015

கழுத்தை அறுத்து பென் படு கொலை???

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கைக் குழந்தையுடன் இருந்த பெண் பொறியாளர் ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பெரும்பாக்கம் அந்தோணியார் நகர் 2-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மென்பொறியாளர் ராஜீவ் இவரது மனைவி ஆர்த்தியும் மென்பொறியாளர். இந்த தம்பதிகளுக்கு 10 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. உறவினரான ஆர்த்தியும், ராஜீவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்...

17 May 2015

ஃபேஸ்புக் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் சாதனை படைத்துள்ளார்.

பேஸ்புக் பக்கம் வாயிலாக தொடர்பு கொள்வோரின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை குறித்து ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், ஒரு சமுதாயத்தில் உள்ள சமூக கட்டமைப்பில் இணைய தளம் என்றுமில்லாத அளவிற்கு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இனி மேல் தங்கள் வாழ்க்கையைப் பற்றி பேசுவோர் இணைய தளத்திற்கு முன்பிருந்த காலம், அதற்குப் பின்பு இருந்த காலம் என்று பிரித்துப் பேச வேண்டிய...

14 May 2015

மடங்களில் சிஏஜி தணிக்கை: முறைகேடுகள் எதிரொலி

  ஒடிஸாவில் செயல்படும் சுமார் 18,000 கோயில்கள், மடங்களின் வருவாயை முதல் முறையாக இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) தணிக்கை செய்யவிருக்கிறார். இதற்கான நடைமுறைகளை சிஏஜி அலுவலகம் தொடங்கிவிட்டதாகவும் இத்தணிக்கைப் பணிக்காக சுமார் 18,000 கோயில்கள், மடங்கள் அடங்கிய பட்டியலை ஒடிஸா அரசு தயாரித்திருப்பதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோயில்கள், மடங்களின் சொந்த வருமானத்துடன் அரசிடம் இருந்து பெறப்படும் நிதியுதவியும் தணிக்கைக்கு...

நான்கு வழிச்சாலையில் விபத்து: முதியவர் சாவு

  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை- மதுரை நான்கு வழிச்சாலையில் வியாழக்கிழமை காலை இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.விராலிமலை அருகே உள்ள வளநாடு கும்பக்கோன்களத்தை சேர்ந்தவர் மாதக்கோனார் மகன் சின்னையா(65) விவசாய வேலை செய்து வரும் இவர் வியாழக்கிழமை அதிகாலை தனது இருசக்கர வாகனத்தில் விராலிமலை-மதுரை நான்கு வழிச்சாலை வழியாக காளப்பனூர் பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தார்.அப்போது மதுரையில் இருந்து திருச்சி...

துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி ஒருவர் படுகாயம்

  தில்லியில் சொத்துத் தகராறு தொடர்பாக நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கூட்டுக்கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.தில்லி, ராஜேந்திர நகரில் சொத்துத் தகராறு தொடர்பாக இரு கோஷ்டியினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் இருவர் மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>...

13 May 2015

மீண்டும் முதல்வராகும் ஜெயலலிதாவுக்கு கடிதம்???

மறுபடி தமிழக முதல்வராகும் செல்வி ஜெயலலிதாவிற்கு டக்ளஸ் தேவானந்தா எழுதிய கடிதம்  மாண்புமிகு தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு, அன்புடையீர்! உங்கள் மீது சோடிக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் நீங்கள் விடுதலையாகி வந்திருப்பது குறித்து தமிழகமெங்கும் பெரு மகிழ்ச்சி பொங்கி வழிகிறது. இந்த மகிழ்ச்சி தனியே தமிழக மக்களுக்கு மட்டுமல்ல. உங்களது விடுதலையால் தமிழக மக்களை போல் ஈழத்தமிழ் மக்களின் மனங்களும் பெரு மகிழ்ச்சி அடைந்திருக்கின்றன. உண்மைகள்...

12 May 2015

நாளை 65 அகதிகள் நாடு திரும்புகின்றனர்!

இந்தியாவிற்கு யுத்தம் காராணமாக  அகதிகளாகத் தஞ்சம் புகுந்தவர்களில் 65 பேர் நாளை நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இந்த 65 இலங்கையர்களும் நாளை காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர். இவர்களை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் வரவேற்கவுள்ளார். இது தொடர்பில் மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதாவது,...

11 May 2015

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்துள்ளது. தமிழக முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக, கடந்த 1996ஆம் ஆண்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில், கடந்த ஆண்டு புரட்டாதி 27ஆம் தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து. இங்குஅழுத்தவும் மேலதிக...

10 May 2015

தமிழக மீனவர்கள் கடற்பரப்பில் கைது

54 தமிழக மீனவர்கள் சிறிலங்காவின் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காங்கேசன்துறை மற்றும் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறையில் ஐந்து படகுகளுடன் 21 மீனவர்கள் கைதாகியுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் மேலும் ஐந்து படகுகளில் எஞ்சிய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை சிறிலங்காவின் கடற்படையினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இங்குஅழுத்தவும்...

06 May 2015

நிலநடுக்க வாய்ப்பு தமிழகத்துக்கு குறைவுதான்!

 தமிழகத்துக்கு நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவுதான் எனத் தெரிய வந்துள்ளது. நிலஅதிர்வு, பூகம்பம், நிலநடுக்கம் என இயற்கைப் பேரிடர்கள் பல பெயர்களில் இருந்தாலும் "பூகம்பம்' என்று சொல்லும் போதே மக்கள் அதிர்ச்சியடைவது வாடிக்கையாகி விட்டது.   அண்டை நாடுகளிலும், இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டால், இந்தியாவில் குறிப்பாக தென் மாநிலங்களில் நிலநடுக்க பாதிப்புகள் நேரலாம் என்ற பீதி அண்மைக்கால சம்பவங்கள் மூலம் பரவி...

04 May 2015

நிலநடுக்கத்தால் பலியானோர் 7,040 ஆக உயர்வு..

நேபாள நிவாரணத்துக்காக தனது ஒரு மாத ஊதியமான ரூ. 1 லட்சத்தை, நிதீஷ் குமார் வியாழக்கிழமை வழங்கியது குறிப்பிடத்தக்கது.???  நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 7,040-ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் தேசியப் பேரிடர் மேலாண்மைப் பிரிவு அலுவலக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்ததாவது: கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை சனிக்கிழமை  (மே...

படைவீரர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை

நாகாலாந்து மாநிலம், மோன் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் 8 பேரை ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து பாதுகாப்புப் படை வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: மோன் மாவட்டம், சாங்லான்சுவில் பாதுகாப்புப் படையினர், நீர் எடுப்பதற்காக தண்ணீர்  டாங்கர்களுடன் சென்றிருந்தபோது, பதுங்கிடம் ஒன்றிலிருந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அவர்கள் உயிரிழந்தனர். அவர்களில் 7 பேர், அஸ்ஸாம்  துப்பாக்கிப்...

02 May 2015

12 வயது சிறுமி குடும்ப தலைவியானர் ---

  சிறுமி விளையாடும் வயதில் குடும்ப தலைவி: வறுமையின் கொடுமையில்   உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகேயுள்ள கிராமத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் 4 பேர் குடிசை வீட்டில் தங்கியுள்ளனர். இந்த குழந்தைகளில் மூத்த சகோதரி குடும்ப தலைவியாகியுள்ளார். இந்த குடிசை வீட்டில் தங்குவதற்காக இவர்கள் மாதம் தோறும் ரூ. ஆயிரம் வாடகை செலுத்த வேண்டியுள்ளது. அவர்களாகவே சமைத்து சாப்பிட்டு கொள்கின்றனர். இரண்டு வருடத்திற்கு முன்பு வறுமை காரணமாகவும், பயிர்கள்...

பாதிக்கப்பட்டவர்களுக்கு நேர்ந்த அவமானம்

 நிலநடுக்கத்தால் காயமடைந்து தர்பங்கா மாவட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனையில் (டிஎம்சிஎச்) சிகிச்சை பெற்று வருபவர்களின் நெற்றியில் ஸ்டிக்கர் ஒட்டியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசு விசாரணைக்கு உத்தர விட்டுள்ளது. நேபாளத்தில் கடந்த சனிக் கிழமை சக்தி  வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பிஹார் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நிலநடுக்கத்தால் காயமடைந்து, டிஎம்சிஎச்...

01 May 2015

இழப்பை சந்திக்கும் சென்னை ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்

 தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்டால் 80 சதவீத கட்டிடங்கள் பலத்த சேதம் அடையும் என்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் பேரழிவு நிர்வாக மையம் சார்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்க பாதிப்பு தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதிநவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஆள் இல்லா குட்டி விமானங்கள் மூலம் படம் பிடிக்கப்பட்டு சென்னையில் உள்ள கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 3 மாடிக்கு...

பஸ்சில் பாலியல் தொல்லை கீழே குதித்த தாய் காயம், மகள் பலி

பஞ்சாப் மாநிலத்தில் பேருந்தில் நடத்துனரின் உதவியாளர் அளித்த பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க தாயும், மகளும் கீழே குதித்துள்ளனர். இதில் 13 வயது மகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பஞ்சாப் மாநிலம் மோகா நகரைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் 35 வயது மனைவி தனது 13 வயது மகள் மற்றும் 14 வயது மகனுடன் உறவினரை சந்திக்க பேருந்தில் அருகில் உள்ள கிராமத்திற்கு நேற்று மாலை சென்றார். பேருந்தில் ஒரு சில பயணிகள் மட்டுமே இருந்தனர். பேருந்து மோகா நகரில் இருந்து 10...

ரூ.2 லட்சம் கோடி: அடுத்த 5 ஆண்டுகளில் முதலீடு செய்ய திட்டம்

நாடு முழுவதும் உள்ள நகர்ப்புறங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளில், இரண்டு லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்படும். இவற்றில் பாதி முதலீடு, மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கிடைக்கும்,'' என, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார். நாடு முழுவதும், 100 இடங்களில், 'ஸ்மார்ட் சிட்டி'கள் அமைக்கவும், புதிய நகர்ப்புற புனரமைப்பு இயக்கத்திற்கும், மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல்...