Search This Blog n

01 May 2015

பஸ்சில் பாலியல் தொல்லை கீழே குதித்த தாய் காயம், மகள் பலி

பஞ்சாப் மாநிலத்தில் பேருந்தில் நடத்துனரின் உதவியாளர் அளித்த பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க தாயும், மகளும் கீழே குதித்துள்ளனர்.
இதில் 13 வயது மகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் மோகா நகரைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் 35 வயது மனைவி தனது 13 வயது மகள் மற்றும் 14 வயது மகனுடன் உறவினரை சந்திக்க பேருந்தில் அருகில் உள்ள கிராமத்திற்கு நேற்று மாலை சென்றார்.
பேருந்தில் ஒரு சில பயணிகள் மட்டுமே இருந்தனர். பேருந்து மோகா நகரில் இருந்து 10 கிமீ சென்ற பிறகு நடத்துனரின் உதவியாளர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தார்.
இது குறித்து அந்த பெண் நடத்துனரிடம் தெரிவித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து அந்த பெண் ஓட்டுநரிடம் பேருந்தை நிறுத்துமாறு கூற அவரும் அதை கண்டுகொள்ளவில்லை. இதனால் அவர் தனது மகளுடன் ஓடும் பேருந்தில்
 இருந்து கீழே குதித்தார்.
இதை பார்த்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். நடத்துனரும், அவரது உதவியாளரும் தப்பியோடி 
விட்டனர். அந்த வழியாகச் சென்றவர்கள் படுகாயம் அடைந்த தாய் மற்றும் மகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி மகள் இறந்துவிட்டார். தாய் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பற்றி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்-----
பஸ்சில் பாலியல் தொல்லை கீழே குதித்த தாய் காயம், மகள் பலி
.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment