Search This Blog n

17 May 2015

ஃபேஸ்புக் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் சாதனை படைத்துள்ளார்.

பேஸ்புக் பக்கம் வாயிலாக தொடர்பு கொள்வோரின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனை குறித்து ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், ஒரு சமுதாயத்தில் உள்ள சமூக கட்டமைப்பில் இணைய தளம் என்றுமில்லாத அளவிற்கு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இனி மேல் தங்கள் வாழ்க்கையைப் பற்றி பேசுவோர் இணைய தளத்திற்கு முன்பிருந்த காலம், அதற்குப் பின்பு இருந்த காலம் என்று பிரித்துப் பேச வேண்டிய சூழல் மனித குலத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.
ஆம், இது இணையதள காலம்! இந்த உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் ஒருவொருக்கொருவர் வேகமாக தொடர்பு கொள்ளும் அளவிற்கு தகவல் தொடர்பில் சமூக
 வலைதளங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டன. நேருக்கு நேர் பேசுவது போன்ற உணர்வை சமூக வலைதளங்களில் தொடர்பு கொள்ளும் போது ஏற்படுவதில்லை என்று சிலர் சொன்னாலும், தகவல் தொடர்பில் சமூக வளைதளங்கள் அசாத்திய வேகத்தை ஏற்படுத்தி புரட்சி செய்திருக்கின்றன.
சில வருடங்களுக்கு முன்பு இருந்ததை
 விட மேலும் எளிதாக இப்போது உங்களுடன் நான் தொடர்பு கொண்டு கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கு என் முகநூல் பக்கம் பெரிதும் உதவிகரமாக இருக்கிறது. என் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் மிகவும் ஆர்வத்துடனும், அதிகமான அக்கறையுடனும் படித்துத் தெரிந்து கொள்கிறேன். அந்த வகையில் இன்று இந்த முகநூல் பக்கம் வாயிலாக என்னைத் தொடர்பு கொள்வோரின் எண்ணிக்கை பத்து லட்சம் பேரை எட்டியுள்ளது. உங்கள் அன்பும் ஆதரவும் தான் இந்த இலக்கை எட்ட வைத்தது, அதற்காக முதலில் உங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி வரும் நாட்களில் மேலும் அதிகமான நண்பர்களுடன் தொடர்பு கொள்ள இந்த முகநூல் பக்கம் எனக்கு பேருதவியாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை . அப்படி வரும் கருத்துக்கள் இன்று நம் மாநிலம் சந்திக்கும் பல முக்கிய பிரச்சினைகள் குறித்து எனக்கு ஒரு பார்வையையும், மாற்று சிந்தனையையும் கொடுக்கிறது. தனியொருவனாக என்னால் சிறிதளவு செய்து முடிக்க முடியும், ஆனால் நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால் நாம் விரும்பும் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.
அந்த மாற்றத்தின் மூலம் நம் மாநிலத்தில்
 நல்லாட்சி மலரச் செய்து, நம் வருங்காலத் தலைமுறைக்கு சிறந்த அடித்தளத்தை அமைத்து தர முடியும். பல லட்சம் முகநூல் நண்பர்கள், உங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதால் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் என்னால் பதில் போட முடியாமல் போயிருக்கலாம்.ஆனால் உங்கள் ஒவ்வொருவரின் கருத்துக்களையும் நான் படித்து கொண்டு தான் இருக்கிறேன். ஆகவே உங்கள் பதிவுகளும், கருத்துக்களும் எனக்கு மிகவும் முக்கியம், தமிழகத்தில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்க நாம் எடுக்கும் முயற்சிகளுக்குத் தேவையான நடவடிக்கைகளை
 முடிவு செய்வதில் அந்த அரிய கருத்துக்கள் எனக்கு கை கொடுக்கின்றன. வருங்காலத்திலும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
ஃபேஸ்புக்கில் திமுக தலைவர் கருணாநிதியை தொடர்பு கொள்வோரின் எண்ணிக்கை 3,50,044 தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

Post a Comment