புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை- மதுரை நான்கு வழிச்சாலையில் வியாழக்கிழமை காலை இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.
விராலிமலை அருகே உள்ள வளநாடு கும்பக்கோன்களத்தை சேர்ந்தவர் மாதக்கோனார் மகன் சின்னையா(65) விவசாய வேலை செய்து வரும் இவர் வியாழக்கிழமை அதிகாலை தனது இருசக்கர வாகனத்தில் விராலிமலை-மதுரை நான்கு வழிச்சாலை வழியாக காளப்பனூர் பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது, இதில் தலையில் பலத்த காயமடைந்த சின்னையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை காவல் உதவி ஆய்வாளர் ந. புகழேந்தி கார் ஓட்டுநர் மதுரையைச் சேர்ந்த க. ராஜ்குமாரை(58) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

0 கருத்துகள்:
Post a Comment