இந்தியாவின் ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் போலி கடவுச்சீட்டுடன் பயணிக்க முற்பட்ட இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்த இலங்கையர் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் சிவா என்பவரிடம் 50,000 ரூபாய் பணம் கொடுத்து போலி கடவுச்சீட்டு தயாரித்து கொடுக்கும்படியும் தன்னை சுவிட்ஸர்லாந்துக்கு அனுப்பி வைக்கும்படியும் கூறியுள்ளதாக தெரிகிறது.
அவ்வாறே போலி கடவுச்சீட்டை தயாரித்த சிவாவும், அவரை ஹைதராபாத் ராஜிவ் காந்தி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
எனினும் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் அது போலி கடவுச்சீட்டு எனத் தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் அவர் உடனடியாக கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பின்னர் சந்தேகநபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்:
Post a Comment