This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

29 December 2013

வடமாநிலங்களில் கடும் குளிர்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வடமாநிலங்களில் கடும் பனி மூட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று தலைநகர் டெல்லி முழுவதும், கூடுதல் வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. குறைந்தபட்ச வெப்ப நிலை 2 டிகிரியில் இருந்து.  மேலும் உத்தரபிரதேசம், ஹரியானா, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் கடும் குளிர் நிலவயது. இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாமல் முடங்கிகிடந்தனர். &nbs...

28 December 2013

கூடங்குளம் பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு முதல்வர் ஒப்புதல்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள ராதாபுரம் மற்றும் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கூடங்குளம் மற்றும் 12 கிராம ஊராட்சிகளில் உள்ள 100 ஊரகக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு தாமிரபரணி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு ஒரு கூட்டுக் குடிநீர்  திட்டத்தினை கூடங்குளம் அணுமின் நிலைய சுற்று வட்டார பகுதிகளுக்கான வளர்ச்சி  திட்டத்தின் கீழ்  செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக...

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம்

ஆந்திர மாநிலம் அனந்த்புர் மாவட்டத்தில் நாண்டேட் விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் பலியாயினர். இதில் பலியாவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று ரயில்வேத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுனக கார்கே அறிவித்துள்ளார். இன்று அதிகாலை 3.15 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பலர், புகையால் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர் என்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ரயில்வே அதிகாரி...

27 December 2013

குஜராத் கலவர வழக்கு: மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி

குஜராத் கலவரம் தொடர்பாக அந்த மாநில முதல்வரும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு எதிராக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குஜராத் கலவரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.பி.யின் மனைவி தாக்கல் செய்த மனுவை ஆமதாபாத் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதுதொடர்பாக மேல்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம்...

சிறுமியை கடத்தி கற்பழித்த இளைஞன் கைது

சென்னையை சேர்ந்தவர் முகமது முஸ்தபா. இவர் ஐதராபாத்தில் உள்ள ஆசீப்நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இதன்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாட்டு மற்றும் நடனம் கற்றுத்தருவதாக அவளது பெற்றோரிடம் கூறி,  குறித்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிகிறது. இந்த சம்பவம் கடந்த 11ம் திகதி இடம்பெற்றுள்ளது.  கேரளாவில் ஆலப்புழையிலுள்ள தனது நண்பர் வீட்டிற்கு கடத்தி சென்று கற்பழித்ததாக தெரிகிறது....

தேவ்யானி கைது தொடர்பில் புதிய தகவல்: தொடரும் !!

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் துணைதூதராக பணியாற்றி வருபவர் தேவ்யானி கோப்ரகடே. இவர், விசா விண்ணப்பத்தில் தவறான தகவல் அளித்ததாகவும், இந்தியாவில் இருந்து அழைத்து வந்த பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டுக்கு மிகக்குறைந்த சம்பளம் அளித்ததாகவும் அமெரிக்க பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 12ம் திகதி தேவ்யானி கைது செய்யப்பட்டார். அவர் ஆடை களைந்து சோதனையிடப்பட்டார். இதனால் இந்தியாவில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதற்கு பதிலடியாக,...

24 December 2013

இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரிசில்

இளமாணி, முதுமாணி மற்றும் கலாநிதி பட்டங்களை இந்தியாவில் தொடர்வதற்கான புலமைப்பரிசிலிற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.கலாச்சார உறவுகளுக்காக இந்தியப் பேரவையின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 180 புலமைப்பரிசில்கள் இலங்கையர்களுக்கு வழங்கப்படவுள்ளது. மருத்துவம் தவிர்ந்த ஏனைய துறைகளில் மாணவர்கள் கல்வியை தொடர்வதற்காக இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.  நேரு ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டத்தில் இளமாணிக் கற்கைகளான பொறியியல், விஞ்ஞானம், வணிகம்,...

லஞ்சம் வாங்கிய அதிகாரிகளை சிக்க வைத்தவருக்கு ரூ. 1 லட்சம் வெகுமதி

திருவள்ளூர் அருகே வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிக்க வைத்த நபருக்கு ஊழலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுவினர் ரூ. 1 லட்சம் வெகுமதியாக அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உள்பட்ட சோரஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன். இவர் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு தனக்கு வாரிசு சான்றிதழ் கோரி அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி சீனிவாசனிடம் விண்ணப்பித்துள்ளார். வாரிசு சான்றிதழ் வழங்க...

23 December 2013

முன்னாள் கிரிக்கெட் வீரரின் மனைவி தற்கொலை

 முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீல் அங்கோலாவின் மனைவி பரீனிதி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புனேயை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீல் அங்கோலாவின் மனைவி பரீனிதி மர்மமான முறையில் அவரது தாயார் வீட்டில் பிணமாகக் கிடந்தார். இது தற்கொலை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர், தற்கொலைக் கடிதம் ஒன்றையும் அவர்கள் மீட்டுள்ளனராம். அதில் தான் தனது வாழ்க்கையில் மிகவும் சோர்வடைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். இவருக்கும், சலீல்...

20 December 2013

தமிழக மீனவர்கள் 30 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 30 பேரின் விளக்கமறியலை மல்லாகம் நீதிமன்றம் நீடித்துள்ளது. கடந்த நவம்பர் 5ஆம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம், புதுக்கோட்டையைச் சேர்ந்த 30 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கை மல்லாகம் நீதிமன்றத்தில் 30 மீனவர்களும் 5வது முறையாக ஆஜர்படுத்தப்பட்டனர். 30 மீனவர்களின் விளக்கமறியல் 2014 ஜனவரி 3 வரை நீட்டிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மீனவர்கள் 30 பேருக்கும்...

18 December 2013

அதிகாரிகளை விசாரிக்க சிபிஐக்கு அரசு அனுமதி தேவையில்லை:

 உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடைபெறும் வழக்குகளில் அரசு அதிகாரிகளை விசாரிக்க மத்திய அரசிடம் சிபிஐ முன் அனுமதி பெறத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது.  இந்த வழக்கில் சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், “இணை இயக்குநர் பொறுப்பு வகிப்பவர்களும், அதற்கு மேற் பொறுப்பில் உள்ளவர்களிடமும் சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசிடம்...

தமிழக மீனவர்கள் சாகும் வரையில் உண்ணாவிரதம்

தமிழக மீனவர்கள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனக் கோரி நாகப்பட்டினம் மீனவர்கள் சாகும் வரையில் உண்ணாவிரதப்...

16 December 2013

45 பேர் கருகிய கோர விபத்து: ரகசியம் அம்பலமானது

பெங்களூரில் வோல்வோ பேருந்து விபத்திற்குள்ளான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 30ம் திகதி பெங்களூரில் இருந்து ஹைதராபாத் சென்ற வோல்வோ பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 45 பேர் உடல் கருகி பலியாகினர். அந்த பேருந்து ஆந்திர மாநிலம் மஹபூப்நகரில் சென்று கொண்டிருக்கையில் மீடியானில் இடித்து டீசல் டேங்க் தீப்பிடித்தது. தீ மளமளவென பேருந்தில் பரவியதில் தீபாவளி கொண்டாட ஊருக்கு சென்ற 45 பேர் உடல் கருகி பலியாகினர். இந்த சம்பவம்...

அசுர வேகத்தில் அதிகரிக்கும் கற்பழிப்பு வழக்குகள்

டெல்லியில் கடந்த 13 ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் அதிகபட்ச கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் திகதி தேதி ஓடும் பஸ்சில் துணை மருத்துவ மாணவி ஒருவர் தனது நண்பருடன் பயணம் செய்தபோது, 5 காமுகர்களைக் கொண்ட கும்பல் ஒன்றினால் கற்பழிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சையின் பலனின்றி மரணமடைந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு பிறகு கற்பழிப்பு வழக்கில்...

15 December 2013

முதலமைச்சர் பதவியை குறிவைக்கிறார் ஹிருணிகா!

 சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் அமைச்சர், பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் மகள், ஹிருணிகா ஆளும்கட்சி சார்பில் மேல் மாகாணசபைத் தேர்தலில், போட்டியிடத் தீர்மானித்துள்ளார். கென்யா சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர் ஹிருணிகாவும் அவரது தாயாரும் இதுதொடர்பாக ஜனாதிபதியை சந்திக்க உள்ளனர். மேல் மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட ஹிருணிகா திட்டமிட்டுள்ளார்.    எதிர்வரும் ஜனவரி மாதம் 6ம் திகதி ஹிருணிகாவின் தந்தையான...

12 December 2013

தடுத்து வைக்கப்பட்டுள்ள 141 இந்திய மீனவர்களும் இன்று

இலங்கை கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 141 இந்திய மீனவர்களை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். முல்லைத்தீவு,செம்மலை,அலம்பில் ஆகிய கடற்பகுதிகளில் வைத்து நேற்று காலை 15 படகில் வந்த 111 இந்நிய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்களையும்  இலங்கை கடற்படையினர்...

10 December 2013

மனைவியுடன் கருத்து வேறுபாடு: நடிகர் பவன்கல்யாண் விவகாரத்து?

  இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நடிகை ரேணு தேசாயை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் நடிகர் பவன் கல்யாண் மனு கொடுத்திருக்கிறார் என்று தெலுங்கு வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் சிரஞ்சீவியின் உடன் பிறந்த தம்பி. தெலுங்கில் இவருக்கு பவர் ஸ்டார் என இன்னொரு பெயரும் உண்டு. பவன் கல்யாணுக்கு இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. முதல் மனைவி நந்தினியை 1997ம் ஆண்டு திருமணம் செய்து, கருத்து வேறுபாடு காரணமாக 2007ம்...

09 December 2013

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருக்கோவில் கால்நடை வளர்ப்பாளர்கள்!

திருக்கோவில் பிரதேசத்தில் வட்டமடு மேய்ச்சல் தரைக்கு சொந்தமான நிலப்பரப்பில் வேளாண்மை செய்வதற்கு ஒரு தலைப்பட்சமாக விவசாயிகளுக்கு வனபரிபாலன சபை அனுமதி வழங்கியதற்கு கால்நடையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, இன்று காலையில் இருந்து சாகும்வரை உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையாக 1976 ம் ஆண்டு அரசாங்கத்தினால் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள வட்டமடு பிரதேசத்தில் 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு...

08 December 2013

தனது மனைவியை ரூ.1.5 லட்சத்துக்கு விலை பேசிய கணவர்

மனைவியை நண்பர்கள் அனுபவிக்க ஒரு இரவுக்கு ரூ.1.5 லட்சத்திற்கு விலை பேசிய கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் இஷார் அலி லஷ்கர்(26). இவர் கடந்த நவம்பர் 28ம் திகதி மேற்கு வங்கத்தில் இருந்து மும்பைக்கு தனது 23 வயது மனைவியுடன் வந்துள்ளார். மும்பை மங்குட் ரயில் நிலையத்தில் வந்திறங்கியவுடன் அவர் அங்கு காத்திருந்த தனது நண்பர்கள் மொபின் குரேஷி(40), சஜித் குரேஷி(24), நிஜாம் கான்(25) மற்றும் சுஜித் குமார் சௌராஸ்யா(43) ஆகியோருடன்...

ஏடிஎம் கொள்ளையன் கைது?

பெங்களூர் ஏடிஎம் கொள்ளையனை பொலிசார் கைது செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் ஏ.டி.எம். மையத்தில் பெண் அதிகாரி ஜோதி உதய் என்பவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி, அரிவாளால் தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்யக்கோரி கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அம்மாநில பொலிசார் குற்றவாளியை கண்டுபிடிக்க...

07 December 2013

ஈழத் தமிழர் அழிவை ‘இனப்படுகொலை’ ஒருநாளும் குறிப்பிட்டதில்லையே!-

  இன்றுவரை மத்திய அரசு ஈழத் தமிழர் அழிவை ‘இனப்படுகொலை’ என்று ஒருநாளும் குறிப்பிட்டதில்லையே. உங்களுக்குத் தெரிந்த இந்த உண்மை, நீங்கள் முக்கிய அங்கம் வகிக்கும் மன்மோகன் அரசுக்கு மட்டும் ஏன் தெரியாமல் போனது? இவ்வாறு குறிப்பிட்டு தமிழருவி மணியன் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு மடல் ஒன்றை வரைந்துள்ளார். மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம். இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும் இந்திய அரசின் நிலையும்’...

04 December 2013

திருப்பதி அருகே 2 போலீஸ்காரர்கள் கொலை

 திருப்பதி அருகே சித்தூர் மாவட்டத்தில், இரண்டு போலீஸ்காரர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் மாவட்டத்தில் உள்ள காட்டு பகுதியில் செம்மரங்கள் ஏராளமாக உள்ளன. இவற்றை கடத்தல் கும்பல் சேர்ந்தவர்கள் வெட்டி கடத்தி அண்டை மாநிலங்களில் விற்றுவருகின்றனர். செம்மரகட்டை கடத்தலை தடுக்க வனத்துறை மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வனபகுதியில் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். சித்தூர் அடுத்த...

01 December 2013

திரைப்படமாக உருவாகும் ஆருஷியின் கொலை வழக்கு

டெல்லி அருகே நொய்டாவில் கடந்த மே மாதம் 2008ம் ஆண்டு டாக்டர் ராஜேஷ் தல்வார்-நூபுர் தல்வார் ஆகியோரின் ஒரே மகளான ஆருஷி, வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யபட்டார். வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், மறுநாள் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரட்டைக் கொலை வழக்கில் பல் மருத்துவர்களான ஆருஷியின் தந்தை ராஜேஷ் மற்றும் தாயார் நுபுர் தல்வார் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது. 2012-ம்...

25 November 2013

ஸ்ருதிஹாசனை தாக்கிய நபரை கைது செய்தது மும்பை பொலிஸ்!

நடிகை ஸ்ருதிஹாசனை தாக்கிய நபரை மும்பை பாந்தரா போலீசார் கைது செய்தனர். தாராவி பகுதியைச் சேர்ந்த அசோக் சங்கர் திரிமுகே என்ற அந்த நபர் புரொடக்‌ஷன் பாயாக பணியாற்றி வருகிறார்.கைது செய்யப்பட்ட அசோக் சங்கர் திரிமுகே, தனது தங்கைக்கு வேலை கேட்பதற்காகவே ஸ்ருதிஹாசனை சந்திக்கச் சென்றதாகவும், பேசிக்கொண்டிருக்கும் போதே ஸ்ருதிஹாசன் கதவை மூட முயன்றதால் தான் அதை தடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். தன் செய்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்....

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனுக்கு நியாயம் வேண்டும்:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எழுந்துள்ள பிரச்சினையில் இனியாவது முழு விசாரணை நடத்தி இத்தனை ஆண்டுகள் சிறையிலே தன் இளம் பிராயத்தைச் செலவிட்ட பேரறிவாளனுக்கு நியாயத்தை வழங்கிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-     கேள்வி:-ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் வாக்குமூலத்தை மாற்றம்...

சிறுமி ஆருஷியை பெற்றோரே கொலை செய்ததாக சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு!

நாட்டை உலுக்கிய 13 வயது சிறுமி ஆருஷி கொலை செய்யப்பட்ட வழக்கில் காசியாபாத் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பெற்றோரே குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி, தண்டனை அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என கூறி உள்ளார். தீர்ப்பை அடுத்து இருவரும் தஸ்னா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீர்ப்பை கேட்டது்ம, தல்வார் கதறி அழுதார். டில்லியில் புறநகர் பகுதியான நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ராஜேஷ் தல்வார்-நுபுர் தல்வார்...

23 November 2013

இலங்கையில் ஆடுகளம் நடிகர் கைது

இலங்கையில் விசா விதிகளை மீறிய குற்றத்திற்காக நடிகர் ஜெயபாலன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை மாங்குளத்தைச் சேர்ந்தவர் பிரபல கவிஞர் வா.ஐ.ச. ஜெயபாலன். இலங்கையில் நடந்த உள்நாட்டு சண்டை காரணமாக புலம் பெயர்ந்து சென்னையில் வசித்து வருகிறார். மேலும் வெயில், ஆடுகளம், பாண்டிய நாடு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவரது தாயாரின் சமாதி இலங்கை மாங்குளம் பகுதியில் உள்ளது. தாயாரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக அவர் நேற்று இலங்கை சென்றார். மாங்குளம்...

இவர்தான் ஸ்ருதியை தாக்கியவராம்! புகைப்படம் வெளியானது

நடிகை ஸ்ருதி ஹாசனை வீடு புகுந்து தாக்கிய மர்ம நபரின் புகைப்படமானது அங்கிருந்த ரகசிய கமெராவில் பதிவாகியுள்ளது. மும்பை பாந்த்ரா கடற்கரையோர பகுதியில் நடிகர், நடிகைகள் அதிகம் வசிக்கும் பிரபலமான அடுக்கு மாடி குடியிருப்பில் 6-வது மாடியில் ஸ்ருதியின் வீடு உள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை காலை அவரது மும்பை வீட்டில் வைத்து தாக்கப்பட்டார். முதலில் இந்த சம்பவம் குறித்து புகார் கொடுக்காத ஸ்ருதிஹாசன் நேற்று முன்தினம் இரவு பாந்திரா பொலிசில் புகார்...

22 November 2013

மனைவியின் துன்புறுத்தல்கள் குறித்து சென்னையில் 5000

ஆண்கள் புகார்; மனைவி தாக்குவதாக 10% புகார், மனைவிக்கும் பிற ஆண்களுக்கும் தொடர்பு 10% சென்­னையில் இவ்­வ­ருடம் மாத்­திரம் மனை­வி­மார்­களின்  கொடு­மைகள், துன்­பு­றுத்­தல்கள், தொடர்­பாக சுமார் 5000 ஆண்கள் முறைப்­பாடு செய்­துள்­ள­தாக  ஆண்­களை பாது­காப்­ப­தற்­கான அமைப்பு தெரி­வித்­துள்­ளது. கடந்த செவ்­வாய்க்­கி­ழமை சர்­வ­தேச ஆண்கள் தினம் அனுஷ்­டிக்­கப்­பட்ட நிலையில், இத்­த­கவல் வெளி­யா­கி­யுள்­ளது. இந்­தி­யாவில் சென்­னை­யி­லி­ருந்­துதான்...

பொலிஸாருக்கு சார்பாக செயற்படுவதாகக் கூறி, நிந்தவூரில் தம்பதி மீது வாள்வெட்டு, தாக்குதல்!

நிந்­தவூர் பிர­தே­சத்தில் மோட்டார் சைக்­கிளில் சென்ற இனந்­தெ­ரி­யாதோர் வீடு ஒன்றில் உள்­நு­ழைந்து கணவன்இ மனைவி மீது வாள்­களால் வெட்டி தாக்­கி­விட்டு தப்­பி­யோ­டி­யுள்ள சம்­பவம் ஒன்று நேற்று முன்­தி­ன­மி­ரவு இடம்­பெற்­றுள்­ளது. இதில் படு­கா­ய­ம­டைந்த இரு­வரும் வைத்­தி­ய­சா­லையில்  அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். தப்­பி­யோ­டி­ய­வர்­களின் மோட்­டார்­சைக்கிள் ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ள­தாக சம்­மாந்­துறை பொலிஸார் தெரி­வித்­தனர். நிந்­தவூர் மீரா­நகர்...

19 November 2013

பெங்களூரில் 15 வயது சிறுமி கடத்தி கற்பழிப்பு

பெங்களூர் அருகே தோடபெலவங்களா என்ற கிராமம் உள்ளது. நேற்று முன்தினம் இந்த கிராமத்தில் நடந்த ஒரு விழாவுக்காக இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்களும் ஏராளமானோர் வந்து இருந்தனர். 10–வது வகுப்பு படிக்கும் ஒரு 15 வயது சிறுமியும் இசை நிகழ்ச்சியை பார்க்க சென்று இருந்தார். நிகழ்ச்சி முடியும் நேரத்தில் மின்சாரம் தடைபட்டது. உடனே, அந்த சிறுமி கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார். அப்போது பின் தொடர்ந்து வந்த 4 வாலிபர்கள்,...

18 November 2013

சச்சின் ஓய்வு: மனமுடைந்த ரசிகர் தற்கொலை

டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதால் மன வேதனை அடைந்த அவரது ரசிகர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குஜராத் மாநிலம் பூஜ் மாவட்டத்தில் உள்ள வார்லி கிராமத்தை சேர்ந்த இளைஞர் விஜய் கோவிந்த் (20). இவர் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகர். சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நாளில் இருந்தே மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார் . கடந்த ஒரு வாரமாக தனது நண்பர்களிடம், சச்சின் ஓய்வு பெறும் நாள்தான் தன் வாழ்வின்...

பணத்துடன் ஏ.டி.எம். இயந்திரத்தை கடத்திச்சென்ற கொள்ளையர்கள்

குஜராத் தலைநகர் அகமதாபாத் அருகே ஏழு இலட்ம் ரூபா பணத்துடன், ஏ.டி.எம். இயந்திரத்தையே கொள்ளையர்கள் கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத் அருகே உள்ள சிங்கர்வா கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஒரு கனரக வாகனத்தில் வந்த சிலர் ஏ.டி.எம். இயந்திரத்தையே தூக்கி அந்த வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இயந்திரத்தின் உள்ளே 6.97 லட்சம் ரூபாய் இருந்ததாக...

15 November 2013

உதயமானது சென்னை கலங்கரை விளக்கம்

சென்னை மெரீனா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட கலங்கரை விளக்கம், அருங்காட்சியகம் ஆகியவற்றை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்து வைத்துள்ளார். நவீனமயம் ஆக்கப்பட்டுள்ள சென்னை கலங்கரை விளக்கம், கப்பல் அருங்காட்சியகம் ஆகியவற்றை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான திறப்பு விழா இந்தியாவில் 7 இடங்களில் அமைக்கப்பட உள்ள நவீன கப்பல் தொடர்பு மையங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா ஆகியவை நேற்று சென்னை கலங்கரை விளக்க வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு மத்திய கப்பல்...

கல்லிலே கலைவண்ணம் கண்ட மாமல்லபுரம் (காணொளி, இணைப்பு)

இந்தியாவிலேயே பாரம்பரியமிக்க கோவில்களையும், சிற்பங்களையும் பெற்று கலையம்சம் கொண்ட பகுதியாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த கல்வெட்டுக்களும், இலக்கியங்களும் காணக் கிடக்கின்றன. இங்கு பல்வேறு இயற்கை வளங்கள், திராவிடக் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன. இவற்றில் அனைவரும் வியக்கத்தக்க வகையில் அமையப் பெற்றது தான் மாமல்லபுரம். கல்லிலே...