நிந்தவூர் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாதோர் வீடு ஒன்றில் உள்நுழைந்து கணவன்இ மனைவி மீது வாள்களால் வெட்டி தாக்கிவிட்டு தப்பியோடியுள்ள சம்பவம் ஒன்று நேற்று முன்தினமிரவு இடம்பெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தப்பியோடியவர்களின் மோட்டார்சைக்கிள் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
நிந்தவூர் மீராநகர் பிரதேசத்தில் உள்ள குறித்த வீட்டில் சம்பவதினத்தன்று இரவு 11.15 மணியளவில் மோட்டார் சைக்கில் ஒன்றில் சென்ற இருவர் உள்நுழைந்து பொலிஸாருக்கு சார்பாக செயற்படுவதாக கூறி கணவன் மனைவி இருவரையும் வாள்களால் வெட்டி மீது தாக்கியுள்ளனர் இதன்போது அவர்கள் கூக்குரலையிட்டு அயவர்கள் சென்றபோது தாக்குதல் நடாத்தியவர்கள் மோட்டார்சைக்கிளை விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதனையடுத்து கணவன் மனைவி இருவரையும் சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளதுடன் தாக்குதல் நடாத்தியவர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
Post a Comment