Search This Blog n

10 November 2013

ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதியுள்ளார் மன்மோகன் சிங்


 கொழும்புவில் நடக்கும் காமென்வெல்த் மாநாட்டில் தன்னால் கலந்து கொள்ள முடியாததற்கு வருத்தம் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் ஆகியவை மத்திய அரசை வலியுறுத்தின.

இதையடுத்து மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளவில்லை. மாறாக வெளிவிவகாரத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் மாநாட்டில் தன்னால் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்து பிரதமர் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் தான் மாநாட்டில் கலந்து கொள்ளாததற்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை என்று கூறப்படுகிறது.
பிரதமர் எழுதியுள்ள கடிதத்தை கொழும்புவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ராஜபக்சேவிடம் அளிப்பார்கள் என்று தெரிய வந்துள்ளது.
 

0 கருத்துகள்:

Post a Comment