இந்தியாவின் போக்குவரத்து துறைக்கு பெரிதும் வரப்பிரசாதமாக இருக்கும் துறை தான் ரயில்வே.
முதல் ரயில் வண்டி கடந்த 1853ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் திகதி, 14 பெட்டிகளுடன் மும்பை போரி பந்தரிலிருந்து 34 கி.மீ தொலைவில் உள்ள தானேக்கு சென்றது.
பின்னர் படிப்படியாக வளர்ச்சி அடைந்து உலகின் மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
குறிப்பாக வருடந்தோறும் 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர்.
வெள்ளையனால் நம் நாட்டிற்குள் ரயில்கள் இறக்குமதி ஆனாலும் இன்று வெள்ளையனே வியக்கும் அளவுக்கு மலைப்பாதைகள், பாலங்கள் வழியே அவை தவழ்ந்து செல்லும் அழகினை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.
அதுவும் மலைப்பாதைகளில் ரயில்கள் செல்லும்போது ஏதோ வேறு ஒரு உலகிற்கு நம்மையெல்லாம் அழைத்துச் செல்கின்றன.
இந்த மலைப்பாதை ரயில்களை அமைக்கப்பட்டதில் ஒரு பரமரகசியமும் உண்டு.
அதாவது இந்தியாவின் மலைப்பகுதிகளில் தங்களின் காலனியாதிக்கத்தை நிறுவுவதற்காகவும், அதன் மூலம் அவ்விடங்களில் இராணுவ தளத்தை அமைக்கவும் திட்டமிட்ட ஆங்கிலேயர்கள் மலைப்பாதைகள் அமைக்க முடிவெடுத்தார்கள்.
இதற்காக டார்ஜீலிங், சிம்லா, காங்ரா பள்ளத்தாக்கு, மாத்தேரான், ஊட்டி ஆகிய பகுதிகளை தெரிவு செய்தனர்.
நீலகிரி மலை ரயில்
இந்தியாவிலேயே பல சக்கரம் கொண்ட ஒரே ரயில் பாதை.
கடந்த 1898ம் ஆண்டு மேட்டுபாளையத்திலிருந்து குன்னூர் வரை நிறுவப்பட்டது.
பின்னர் 1908ம் ஆண்டு உதகை வரை இப்பாதை நீடிக்கப்பட்டது. நூற்றாண்டைக் கடந்த மலை ரயிலுக்கு கடந்த 2004ம் ஆண்டு ‘யுனெஸ்கோ’ நிறுவனத்தின் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டது.
{வெள்ளையர்களை வாய்பிளக்க வைத்த இந்தியர்கள் (காணொளி,கள்,புகைபடங்கள், )
கல்கா- சிம்லா ரயில்வே
கல்கா-சிம்லா ரயில்வே பாதை அமைக்கப்பட்டதன் பின்னணி மிகவும் சுவாரசியமானது.
அதாவது ஆங்கிலேயர்கள் சிம்லாவின் குளிர்ச்சியான தட்பவெப்பநிலை காரணமாக தங்களுடைய கோடைக்கால தலைநகராக சிம்லாவை மாற்றிக்கொண்டனர்.
அதோடு இராணுவ அலுவலகமும் அங்கே நிறுவப்பட்டதால் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
எனவே இமயமலை அடிவாரத்தில் சிம்லா மற்றும் கல்கா ஆகிய இரு நகரங்களுக்கிடையே இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டு 1903ம் ஆண்டிலிருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது.
மாத்தேரான் மலை ரயில்
மகராஷ்டிர மாநிலத்தின் பாரம்பரிய ரயில் பாதையாக மாத்தேரான் மலை ரயில் பாதை அறியப்படுகிறது.
1907ம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் இந்த ரயில் மாத்தேரான் மற்றும் நேரல் நகரங்களை இணைக்கிறது.
இந்தப் பாதையில் ஒரே ஒரு சுரங்கவழியே காணப்படுகிறது. அந்த சுரங்கம் 'ஒரு முத்த சுரங்கம்' என்று அழைக்கப்படுகிறது.
அதாவது இந்த சுரங்கத்தை கடக்க ஆகும் நேரத்தில் நீங்கள் உங்கள் காதல் துணைக்கு ஒரு முத்தத்தை கொடுத்து விடலாமாம்.
காங்க்ரா பள்ளத்தாக்கு ரயில்வே
ஏராளமான இந்து கோயில்களுக்கும், கவின் கொஞ்சும் இயற்கை காட்சிகளுக்கும் பெயர்பெற்றது.
இந்த காங்க்ரா பள்ளத்தாக்கு ரயில் பாதையில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட 971 பாலங்களும், 2 சுரங்கங்களும் அமைந்துள்ளன.
இது பதான்கோட் மற்றும் ஜோகிந்தர் நகருக்கு இடையே 163 கி.மீ தூரம் பயணிக்கிறது. எங்கு பார்த்தாலும் இயற்கையின் அற்புத காட்சிகள் நம்மை கிறங்கடிக்கும் என்பதால் காங்க்ரா பள்ளத்தாக்கு ரயில் பயணம் மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்
>
0 கருத்துகள்:
Post a Comment