நடிகை ஸ்ருதிஹாசனை தாக்கிய நபரை மும்பை பாந்தரா போலீசார் கைது செய்தனர். தாராவி பகுதியைச் சேர்ந்த அசோக் சங்கர் திரிமுகே என்ற அந்த நபர் புரொடக்ஷன் பாயாக பணியாற்றி வருகிறார்.கைது செய்யப்பட்ட அசோக் சங்கர் திரிமுகே, தனது தங்கைக்கு வேலை கேட்பதற்காகவே ஸ்ருதிஹாசனை சந்திக்கச் சென்றதாகவும், பேசிக்கொண்டிருக்கும் போதே ஸ்ருதிஹாசன் கதவை மூட முயன்றதால் தான் அதை தடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். தன் செய்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஸ்ருதிஹாசனோ அந்த நபர் தன்னை கடந்த ஓராண்டு காலத்திற்கு மேலாக துரத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், கடந்த செவ்வாய்க்கிழமை காலை அவரது மும்பை வீட்டில் மர்ம நபரால் தாக்கப்பட்டார். இச்சம்பவத்தினால் ஸ்ருதிஹாசன் அந்த வீட்டில் தங்காமல், தனது தோழி வீட்டில் தங்கி வந்தார். போலீசில் புகார்
கொடுக்காமல் இருந்த ஸ்ருதிஹாசன், நேற்று பாந்தரா போலீசில் புகார் அளித்தார்.ஸ்ருதிஹாசனிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர். அசோக் சங்கர் திரிமுகே மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 452, 354, 354D ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment