இசைப்பிரியா படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கோமாவில் இருந்தாரா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை இன்று காலை சந்தித்துப் பேசினார்.
அப்போது செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், தமிழகத்தில் அதிமுக அரசு ஏதேச்சதிகார போக்குடன் நடந்து கொள்கிறது, கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான அமைப்புகள் மீது இதுபோன்ற அடக்கு முறைகள் தொடருமானால் ஒட்டு மொத்த தமிழர்களின் ஆதரவை இழக்க நேரிடும்.
மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இசைப்பிரியா படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கொல்லப்பட்டது 2008ஆம் ஆண்டு. ஆனால், இப்போதுதான் சிதம்பரம் கண்டனம் தெரிவித்தள்ளார்.
அன்று முதல் இவர் கோமாவில் இருந்தாரா, அதேப்போல, திமுக தலைவர் கருணாநிதியும், இலங்கையில் 8 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அவை பழைய புகைப்படங்கள் போல உள்ளதே என்றார்.
ஆனால் அவர் தற்போது இசைப்பிரியா படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கிறார். இவர்களைப் போன்றவர்களின் பேச்சுக்களால் மக்களை ஏமாற்ற முடியாது.
காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் மாணவர்கள், தமிழ் ஆர்வாளர்களின் போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment