Search This Blog n

01 November 2013

கனடாவில் இரசாயன ஆலையில் வெடி விபத்து


கனடாவின் மொன்றியலில் இரசாயன ஆலையொன்றில் பாரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

கனடாவின் மொன்றியலுக்கு கிழக்குப் பக்கமாக 80 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கிறான்பி என்னும் இடத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலையே விபத்தில் சிக்கியுள்ளது.
இந்த விபத்து நேற்று மாலையில் நடந்தது என்றும், தொழிலாளர்கள் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அண்மை பகுதியில் வசிக்கும் மக்கள்

 உடனடியாக தத்தமது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றார்கள் என்றும், கிட்டத்தட்ட 3,600 கிலோ நிறையுள்ள பொலிஸ்றேன் எனப்படும் இரசாயனப் பொருள் நெருப்பில் எரிந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்தப் பகுதியில் மிகவும் அடர்ந்த புகைமூட்டம் காணப்படுவதாகவும், அவைகள் பல மைல்கள் தூரத்திற்கு அப்பாலும் கூட புகைமூட்டத்தைக் காணக்கூடியதாவுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


 

0 கருத்துகள்:

Post a Comment