நடிகை ஸ்ருதி ஹாசனை வீடு புகுந்து தாக்கிய மர்ம நபரின் புகைப்படமானது அங்கிருந்த ரகசிய கமெராவில் பதிவாகியுள்ளது.
மும்பை பாந்த்ரா கடற்கரையோர பகுதியில் நடிகர், நடிகைகள் அதிகம் வசிக்கும் பிரபலமான அடுக்கு மாடி குடியிருப்பில் 6-வது மாடியில் ஸ்ருதியின் வீடு உள்ளது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை காலை அவரது மும்பை வீட்டில் வைத்து தாக்கப்பட்டார்.
முதலில் இந்த சம்பவம் குறித்து புகார் கொடுக்காத ஸ்ருதிஹாசன் நேற்று முன்தினம் இரவு பாந்திரா பொலிசில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசனிடம் அத்துமீறி நடந்து கொண்டது யார் என்பது தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில ஸ்ருதிஹாசன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு பொலிசார் நேரில் சென்று விசாரித்தனர். அங்கு வரும் வெளியாட்கள், பாதுகாவலர் அறையில் இருக்கும் நோட்டில் தங்களது பெயர் விவரங்களை எழுதி வைப்பது வழக்கம்.அந்த நோட்டில் பார்த்த போது ஸ்ருதிஹாசனை பார்க்க வந்தது அசோக் ஜெயின் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அங்கிருந்த ரகசிய கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் குறிப்பிட்ட நேரத்தில் வந்த நபர் அசோக் ஜெயின் என்று தனது பெயரை பதிவு செய்து இருந்தது தெரியவந்தது. அந்த நபரை அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாவலர்கள் அடையாளம் காட்டினர்.
மேலும் அந்த நபர் சிறிது நாட்களுக்கு முன் ஸ்ருதி ஹாசன் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பு
அரங்குகளிலும் ஸ்ருதியைத் தொட முயற்சித்து விரட்டியடிக்கப்பட்டுள்ளான். படப்பிடிப்பு குழுவினரிடம் கண்காணிப்பு கமெரா வீடியோவைக் காட்டியபோது, அவர்களும் அந்த வாலிபரை அடையாளம் காட்டினர்.
இதனைத் தொடர்ந்து அந்த நபர் மீது அத்துமீறல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
0 கருத்துகள்:
Post a Comment