Search This Blog n

03 November 2013

வதந்தியால் வந்த வினை: 10 பேர் உடல் நசுங்கி பலி


ஆந்திராவில் ரயிலில் தீ பிடித்ததாக வதந்தி பரவியதும், பயந்து போய் கீழே குதித்த பயணிகள் பரிதாபமாக பலியாயினர்.
கேரளாவின் ஆலப்புழா நகரில் இருந்து

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு பொகாரோ எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் நேற்றிரவு 7.00 மணிக்கு ஆந்திர மாநிலம் விஜயநகரம் வழியாக சென்று கொண்டிருந்தது.
அப்போது ரயிலில் தீப்பற்றியுள்ளதாகவும், பெட்டிகள் எரிந்து விடும் என்றும் சிலர் வதந்தியை பரப்பியுள்ளனர்.

இதனை நம்பிய பயணிகள் சிலர், அபாயச்சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர், உடனே பலர் ரயிலில் இருந்து கீழே குதித்தனர்.
அப்போது அருகேயுள்ள மற்றொரு தண்டவாளத்தில்

 வந்த ராய்கர்(ஒடிசா மாநிலம்)- விஜயவாடா ரயில் பயணிகள் மீது மோதியது.
இதில் பயணிகளில் பத்து பேர் பரிதாபமாக பலியாகினர், மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்த ரயில்வே மற்றும் மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மீட்புப்பணிகளை துரிதமாக மேற்கொள்ளும்படி மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகாஜூன கார்கே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்
 

0 கருத்துகள்:

Post a Comment