சென்னை மெரீனா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட கலங்கரை விளக்கம், அருங்காட்சியகம் ஆகியவற்றை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்து வைத்துள்ளார்.
நவீனமயம் ஆக்கப்பட்டுள்ள சென்னை கலங்கரை விளக்கம், கப்பல் அருங்காட்சியகம் ஆகியவற்றை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான திறப்பு விழா இந்தியாவில் 7 இடங்களில் அமைக்கப்பட உள்ள நவீன கப்பல் தொடர்பு மையங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா ஆகியவை நேற்று சென்னை கலங்கரை விளக்க வளாகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். அவர் புதுப்பிக்கப்பட்ட கலங்கரை விளக்கம், அருங்காட்சியகம் ஆகியவற்றை திறந்து வைத்து நவீன கப்பல் தொடர்பு மையங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னை மெரினா கலங்கரை விளக்கம் மாணவ -மாணவிகள், பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் பயன் பாட்டுக்காக புதுப்பித்து திறக்கப்பட்டுள்ளது.
இது கப்பல்துறை அதிகாரிகளின் தீவிர முயற்சியால் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பொது அறிவை வளர்ப்பதற்கும், ஆற்றலை ஊக்குவிப்பதற்கும் இது பயன்படும், கடலில் கப்பல் செல்வதையும் இதன்மூலம் பார்க்கலாம்.
இதுகுறித்து ஜி.கே.வாசன் கூறுகையில், 2 மாதங்களுக்கு முன்பு இதை திறக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் எல்லா வசதிகளையும் செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து இப்போது திறந்திருக்கிறோம்.
இந்தியாவிலேயே லிப்ட் வசதியுடன் கூடிய கலங்கரைவிளக்கம் சென்னையில்தான் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தரைத்தளத்தில் கப்பல் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய கப்பல் துறை பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன. இதனை நேற்றைய தினம் ஏராளமான மாணவர்களும், பொதுமக்களும் பார்வையிட்டனர்.
கலங்கரை விளக்கத்தை சுற்றிப்பார்க்க சிறுவர்களுக்கு ரூ
.5ம், பெரியவர்களுக்கு ரூ.10ம் கட்டணமாக வசூலிக்கப்படும். பள்ளி மாணவர்கள் இலவசமாக பார்க்கலாம்.
மேலும் கமெராவுடன் சென்று படம் எடுக்க கட்டணம் ரூ.25 செலுத்த வேண்டும். தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
திங்கட்கிழமை விடுமுறை, பார்வையாளர்கள்
போன்று சமூக விரோதிகள் கலங்கரை விளக்கத்துக்குள் நுழைவதை தடுக்க மெட்டல் டிடெக்டர் வாயில் அமைக்கப்பட்டுள்ளது. அவசர நேரத்தில் பார்வையாளர்கள் வெளியேற மாற்றுப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுநாள் வரை தூரத்தில் இருந்தே கலங்கரை விளக்கத்தினை பார்வையிட்ட பொதுமக்களும், மாணவர்களும் இன்று உள்ளே சென்று நேரடியாக பார்த்து ரசித்தனர். 9மாடிவரை லிப்டில் பயணம் செய்து 10 வது மாடிக்கு படியில் சென்று மெரீனா கடற்கரையின் அழகை கண்டு உற்சாகமடைந்தனர்.
0 கருத்துகள்:
Post a Comment