Search This Blog n

06 November 2013

ஆசிய பசிபிக் அழகியின் வைர கிரீடம் விமான நிலையத்தில் பறிமுதல்


தென் கொரியாவில் உள்ள புஷன் நகரில் கடந்த மாதம் 30-ம் தேதி ஆசிய பசிபிக் அழகி போட்டி நடைபெற்றது.
49 நாடுகளை சேர்ந்த பெண்கள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த சிரிஷ்டி ராணா முதல் இடத்தை பெற்று சிறந்த அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற இதே போட்டியில் வெற்றி பெற்ற இந்தியாவை சேர்ந்த ஹிமாங்கினி சிங் யாது, சிரிஷ்டி ராணாவுக்கு சிறந்த ஆசிய பசிபிக் அழகிக்கான கிரீடத்தை சூட்டினார்.

வெற்றி களிப்புடன் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தை வந்தடைந்த சிரிஷ்டி ராணாவை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்துக்கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அத்துடன் அவரை இன்னொரு பிரச்சினையும் சூழ்ந்துக்கொண்டது.

அழகு ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது சூட்டப்பட்ட கிரீடத்தில் வைரக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதால் அதற்கான இறக்குமதி சுங்க வரியை கட்டிவிட்டு கிரீடத்தை பெற்று செல்லும்படி கூறிய விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து வைத்துள்ளனர்.
வைரங்களின் மதிப்பு தொடர்பாக நிபுணர்கள் சான்றிதழ் அளித்த பின்னர் அந்த மதிப்புக்குரிய வரியை கட்டிவிட்டு கிரீடத்தை பெற்று செல்லலாம் என சிரிஷ்டி ராணாவிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற நிகழ்வுகளில் பெற்ற பரிசுகளை இந்தியாவுக்கு கொண்டு வருபவர்கள், மத்திய சுங்கம் மற்றும் தீர்வை துறையினரிடம் முன்கூட்டியே தெரிவித்து வரிவிலக்குக்கான அனுமதி கடிதம் பெற வேண்டும்.
சிரிஷ்டி ராணா அத்தகைய அனுமதியை பெறாததால் கிரீடம் பறிமுதல் செய்யப்பட்டது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

0 கருத்துகள்:

Post a Comment