This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

30 September 2014

சசிகலாவையும் தன்னுடன் சிறையில்இருக்க அனுமதி கோரி ஜெயலலிதா மனு!-

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, தன்னுடைய தோழி சசிகலாவை தன்னுடன் இருக்க அனுமதி கோரி சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா உள்பட 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய...

ஜெயலலிதா அம்மையாருக்கு ஈழத்தமிழர் எழுதும் கடிதம்!

அன்புமிகு ஜெயலலிதா அம்மையாருக்கு அன்பு வணக்கம். பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தங்களுக்கு விதித்த தீர்ப்பறிந்து ஈழத்தமிழர்களாகிய நாம் அதிர்ந்து போனோம். ஏன்தான் இப்படியயன்று நொந்து கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியேதுமில்லை. தமிழர்களை நீதியும் அநீதியும் வாட்டுவதுதான் வேதனையிலும் வேதனை. தமிழகத்தின் முதலமைச்சர் என்ற பதவியிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக நீங்கள் குரல் கொடுத்ததை மறந்து விட முடியாது. 2009 ஆம் ஆண்டில் ஈழத்தமிழர்கள் இலங்கையில் வதைபட்டபோது,...

ஜெயலலிதா மனு பிணையில் சென்றால் எங்கும் தப்பி ஓடமாட்டேன்-

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரும், தங்களது வழக்கறிஞர்கள் மூலமாக தனித்தனியாக பிணை கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். ஒவ்வொரு பிணை மனுவுடன் தீர்ப்பின் நகலும் ஆயிரம் பக்கங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா தனது பிணை மனுவில், ‘’தனக்கு 66வயது ஆகிறது. சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு நோய் உள்ளதால் தொடர்ந்து சிகிச்சை எடுத்டுக்கொள்ள வேண்டும். பெங்களூர் சிறைச்சாலையில் போதிய பாதுகாப்பு...

கடற்பரப்பில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்! இந்தியா அவதானம்

 அண்மையில் சிறீலங்கா  கடற்பரப்பில் சீன நீர்மூழ்கி கப்பல் ஒன்று வந்துள்ளமை தொடர்பில் முழு அவதானத்தையும் செலுத்தியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தி வருவதாக அட்மிரல் ரோபின் தோவன் தெரிவித்துள்ளார். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>...

28 September 2014

அடுத்த முதல்வர் யார்? ஜெயலலிதாவிடம் ஆலோசனை!

அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவை சந்திக்க தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பெங்களூர் புறப்பட்டு சென்றுள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறியது. பின்னர் ஜெயலலிதாவும் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் தானாகவே முதலமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ.பதவியையும் இழந்து...

27 September 2014

திமுக அலுவலகம் மீது கல்வீச்சு தமிழகத்தில் பதட்டம்!

ஜெயலலிதா மீதான வழக்கில் சனிக்கிழமை தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து,  கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் கர்நாடக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. மதுரையில்  கடைகள் அடைக்கப்பட்டன. சாலை மறியல், கல் வீச்சு சம்பங்கள் நடந்தன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுக்கோட்டை திமுக அலுவலகம் மீது  கல்வீச்சு சம்பவம் நடந்தது. போலீசார் திமுக...

25 September 2014

மீனவர்கள் 6 பேர் தமிழக மற்றும் ஆந்திர கடற்பரப்பில் கைது

தமிழக மற்றும்ஆந்திர மாநில எல்லைப்பகுதியிலுள்ள கடற்பரப்பில்மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 6 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணாம்பட்டினம் கடற்பரப்பில் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினின் ரோந்து நடவடிக்கையில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள், சென்னை துறைமுக பொலிஸாரிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலங்கை மீனவர்களின் மீன்பிடி படகும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த மீனவர்கள் தொடர்பிலான...

24 September 2014

இரண்டு வழக்குகள்சுப்பிரமணியம் சுவாமிக்கு எதிராக !

இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமிக்கு எதிராக மேலும் இரண்டு அவதூறு வழக்குகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தாக்கல் செய்துள்ளார். நேற்று இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் பிரின்சிபல் செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த செப்டம்பர் 20ஆம் திகதியன்று சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் ஜெயலலிதாவுக்கு...

23 September 2014

மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் நோக்கம் இல்லை

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட மாட்டாது என்று இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. தமது பிடிப்பட்ட படகுகள் இலங்கை அதிகாரிகளால் ஏலத்தில் விடப்படவுள்ளதாக அண்மையில் தமிழக மீனவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸின் இது தொடர்பான குற்றச்சாட்டும் இந்திய ஊடகங்களில் வெளியானது. எனினும் அவ்வாறான எந்த ஏற்பாடுகளும் இல்லை என்ற மீன்பிடித்துறை...

21 September 2014

இந்தியப்பிரஜைகள் ஏழு பேர் கைது!

 சுற்றுலா விஸாவில் இலங்கைக்கு வருகைதந்து கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் இந்தியப்பிரஜைகள் ஏழு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நாயப்பட்டிமுன எனுமிடத்தில் வைத்தே இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>...

19 September 2014

சிறைக் கைதி தற்கொலைக்கு முயற்சி

 இலங்கைக்கு கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கைதியொருவர், தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.ராஜா (வயது 32) என்பவரே இவ்வாறு தற்கொலைக்கு முயன்ற நிலையில், கடந்த புதன்கிழமை (17) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தனர். இலங்கைக்கு...

17 September 2014

விஜய்க்கு 3 நிபந்தனைகள் - புகழேந்தி தங்கராஜ்

 விஜயின் ‘கத்தி’ திரைப்படத்தைத் தயாரித்துள்ள லைகா மொபைல் நிறுவனத்துக்கும், இனப்படுகொலை செய்த ராஜபக்சே குடும்பத்துக்கும் இடையிலான உறவும் தொடர்பும், அளவுக்கதிகமாக அம்பலமாகி விட்டது. இப்படியெல்லாம் அம்பலமாவோம் என்பதை அறியாமல் – ‘தமிழரின் ரத்தத்தில் நனைந்த பணத்தில் படமெடுக்கிற இழிபிறவிகளா நாங்கள்’ என்றெல்லாம் சவுண்ட் கொடுத்தவர்கள், இப்போது சைலண்ட் மோடுக்குப் போயிருக்கிறார்கள். கத்தி தயாரிப்புப் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்து விட்டன. “படமே முடிந்துவிட்ட...

16 September 2014

ராமநாதபுரத்தில் உள்ள 184 கிராமங்களில் இந்தியப் புலனாய்வாளர்கள்!

 சிறிலங்காவில் இருந்து தென்னிந்தியாவுக்குள் தீவிரவாதிகள் பிரவேசிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள 184 கிராமங்களிலும் இந்திய புலனாய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளும், புலனாய்வு அமைப்புகளும் தென்னிந்தியாவில் தாக்குதலை நடத்துவதற்காக சிறிலங்காவை பயன்படுத்தி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறிலங்காவில் இருந்து கடல்மார்க்கமாக...

15 September 2014

ஜெயலலிதாவை அழைக்கும் விஜயகாந்த்: சூப்பர் கொமடி

 பேஸ்புக்கில் கிண்டல் அடிப்பது என்றால் முதலில் விஜயகாந்தின் புகைப்படம் தான் எல்லோர் கண்களிலும், கைகளிலும் தட்டுப்படும். அருவடைய புகைப்படங்களுடன் வரும், கொமடி வசனங்களுக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. அந்த வகையில் தற்போது, கத்தி படத்தில் பாடல் வரிகளோடு சேர்த்து, முதல்வர் ஜெயலலிதாவையும், விஜயகாந்தையும் கிண்டலடித்துள்ளார்கள். கத்தி படத்தில் நடிகர் விஜய், லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள என்ற பாடலை பாடியுள்ளார். இந்நிலையில் இந்த பாடலை விஜயகாந்த்...

14 September 2014

பா.ஜ.க இரட்டை நிலைப்பாடு- தமிழக முதல்வர் குற்றச்சாட்டு

தமிழக மீனவர் பிரச்சினையில் பாரதீய ஜனதாக் கட்சி இரட்டை நிலைப்பாட்டினை கொண்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்ற நிலையில் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தமிழகத்தலுள்ள பாரதீய ஜனதாக் கட்சியினர் கூறிவருவதாக தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அதே கட்சியைச் செர்ந்த மூத்த தலைவர் ஒருவர் மீனவர்களுக்கு எதிராக செயற்படுவதாக...

13 September 2014

மாபெரும் தமிழர் பேரணி 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி !

                                            5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி                                                      ...

11 September 2014

தமிழக மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் கைது!

 இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில்  மேலும்  தமிழக மீனவர்கள் 30 பேரை தலைமன்னார் கடற்பரப்பில்   இன்று வியாழக்கிழமை  அதிகாலை  கைதுசெய்ததாக மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் வி.ஸ்.மெராண்டா தெரிவித்தார். 06 படகுகளில் வந்த இந்த மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்து தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த...

10 September 2014

இறந்ததாகக் கூறப்பட்ட பெண் இறுதிச் சடங்கில் கண் விழித்தார்!

தமிழகத்தின் வேலூர் அரசு மருத்துவமனையில் இறந்து விட்டதாகக் கூறப்பட்ட பெண் இறுதிச்சடங்கின் போது கண் விழித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ஷேனாஸ் (54) என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் (7) இரவு இறந்ததாகத் தெரிகிறது. அவரது...

09 September 2014

மீனவர்கள் கைது! நாளைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர்

  தமிழ் நாட்டை சேர்ந்த ஆறு மீனவர்கள் நேற்று மன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைதாகும் போது, அவர்களின் படகு பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அவர்கள் இன்னும் மன்னார் கடற்தொழில் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளிடம் கையளிக்கப்படவில்லை. கைதான ஆறு மீனவர்களில் ஒருவரை கடற்படையினர் படகினை மீட்பதற்காக அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.  பெரும்பாலும் அவர்கள் ஆறு பேரும் இன்று கடற்தொழில் கூட்டுத்தாபனத்தினால்...

கிடா வெட்டி காவல் நிலையத்தில் பூஜை செய்த பொலிசார்

நாமக்கல் அருகே காவல் நிலையம் ஒன்றில் விபத்து, திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பரிகாரத்திற்காக கிடா வெட்டி பொலிசார் ரகசிய பூஜை செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றிய பல தொடர்ந்து பொலிசார் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர். மேலும் இந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்கள், சாலை விபத்துகளும் தொடர்ந்து நடந்ததால் பொலிசார் மன உளைச்சல் அடைந்துள்ளனர். இதையொட்டி, நேற்று அதிகாலை...

08 September 2014

நிலநடுக்கத்தைக் கண்டறியும் கருவி அமைக்கும் பணி தீவிரம்

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் நில நடுக்கத்தைக் கண்டறியும் கருவி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குமரி மாவட்ட கடலோரக் கிராமங்களில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 இல் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 850-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவித்தனர். சுனாமிக்குப் பின்னர் கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருவதால் கன்னியாகுமரியில் நிலநடுக்கத்தைக் கண்டறியும் கருவி அமைக்க வேண்டும் என பொதுமக்கள்...

விற்கப்படும் பெண்கள்: புரோக்கள் என்ற பெயரில் சமூகத்தில்

ராஜஸ்தான் மாநிலங்களில் இளம் பெண்கள், ஆடு, மாடுகளை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் அவலம் நடந்து வருகிறது. பெண் குழந்தைகளை பெற்றோரே விலைக்கு விற்று விடுகிறார்கள். மேவாட் என்ற நகரில் காலங்காலமாய் நடந்துவரும் வியாபாரம் இது. அதிகபட்சம் ரூ.35 ஆயிரம் வரைக்கும் இங்கே பெண்கள் விற்பனை செய்யப்படுகிறார்கள். சிறுமி, வயதுக்கு வந்த பெண், இளம் பெண் என்று வயதிற்கேற்றபடி விலை நிர்ணயிக்கிறார்கள். இந்த விற்பனை நேரடியாகவோ, இடைத்தரகர்கள் மூலமாகவோ நடக்கிறது....

நெஞ்சை உருக்கும் காதல் கதை சிறுநீரகத்தால் இணைந்த இதயங்கள்:

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த இளைஞருக்கு பெண் ஒருவர் தனது சிறுநீரகத்தை தானம் செய்ததோடு அவரை காதல் திருமணமும் புரிந்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோட்டை சேர்ந்த ரமீஷ் என்ற இளைஞருக்கு அவரது தாயாருக்கு வந்ததைபோலவே சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரமீஷின் நண்பர் சதீஷ் என்பவரின் தங்கை சபிதா மருத்துவமனையில் ரமீஷை பார்த்துகொள்ள சென்றுள்ளார். அன்று ரமீஷிற்கு கண்களை பரிசோதிக்க அழைத்து சென்றபோது கண்களுக்கு மருந்து...

07 September 2014

பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இளம்ஜோடிகள்:???'

மதுரையில் இருந்து சென்னை வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வடமாநில இளம்ஜோடிகள் சில்மிஷம் செய்ததால் பாதிவழியில் இறக்கி விடப்பட்டுள்ளனர். பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வடமாநிலத்தை சேர்ந்த 3 வாலிபர்களும், 2 இளம்பெண்களும் சென்னை செல்வதற்காக ரயிலில் உள்ள மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டியில் ஏறியுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவில் அரியலூர் ரயில் நிலையம் அருகே...

05 September 2014

நடிகர் ரொனால்டு கொலையில் நடிகை ஸ்ருதி சிக்கினார்

மதுரவாயலில் கடந்த மே மாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சினிமா துணை நடிகர் ரொனால்டு கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பெங்களூர்  நடிகை ஸ்ருதி சந்திரலேகா 8 மாதங்களுக்கு பின்னர் போலீசில் சிக்கியுள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:– நெல்லை மாவட்டம் நாங்குனேரி அருகே உள்ள பரப்பாடியைச் சேர்ந்தவர் ரொனால்டு பீட்டர் பிரின்ஸ் (36). மெக்கானிக்கல் என்ஜினீயரான இவர் கம்ப்யூட்டர் தொடர்பான படிப்புகளையும் படித்துள்ளார். தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம்...

04 September 2014

பெரும்பாலும் மீன்பிடி இயந்திரப் படகுகள் சசிகலாவுக்கு சொந்தமானது -

 தமிழக மீனவர்களின் இயந்திரப் படகுகளில் பெரும்பாலும் திமுகவின் டி.ஆர். பாலு மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமானது என்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார். சுப்பிரமணியன் சுவாமி தந்தி தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், இலங்கைக்கு தான் சென்று மகிந்த ராஜபக்சேவை சந்தித்த போது தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள்.....

03 September 2014

"செக்" வைத்த அரசு பார் செல்லும் பெண்களுக்கு

மகாராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க ஹொட்டல்களில் உள்ள மதுமான கடைகளுக்கு செல்லும் பெண்களுக்கு தடைவிதிக்க மாநில அரசால் பரிந்துறைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க விதிமுறைகளை பரிந்துரை செய்ய மகாராஷ்டிரா மாநில அரசின் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் தர்மாதிகாரி தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழு ஹொட்டல்களில் உள்ள மது பானக்கடைகளுக்கு செல்லும் பெண்களுக்கு தடை விதிக்க வேண்டும் என பரிந்துறை...

02 September 2014

இலங்கையிலிருந்துபாகிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்த அனுமதி

அரசியல் தஞ்சம் கோரி நாட்டில் தங்கியிருந்த பாகிஸ்தான் நாட்டு பிரஜைகளை நாடு கடத்துவதற்கு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நேற்று நீக்கப்பட்டது. அரசு சார்பில் ஆஜராகிய பிரதி சொலிஸ்டர் நாயகம் ஜனகத் சில்வாவினால் முன்வைக்கப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து மேல் நீதிமன்றத்தால் இடைக்கால தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்படிக்கைக்கு அமைய பாகிஸ்தான் பிரஜைகளை...

01 September 2014

காதல் வலைவீசி விபச்சாரத்தில் தள்ளப்பட்ட பெண்கள்

சீனாவில் பள்ளி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவின் ஹுபே (Hubei) மாகாணத்தில் பள்ளி மாணவிகள் உள்பட முப்பதுக்கும் மேற்பட்ட இளம் பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இணையதளத்தின் வாயிலாக இளம் பெண்கள் மற்றும் மாணவிகளை ஏமாற்றி அவர்களை காதல் வலையில் ஒரு கும்பல் சிக்கவைக்கின்றது. இதன்பின் அந்தப் பெண்களை யிசாங்...