இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமிக்கு எதிராக மேலும் இரண்டு அவதூறு வழக்குகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தாக்கல் செய்துள்ளார்.
நேற்று இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் பிரின்சிபல் செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
கடந்த செப்டம்பர் 20ஆம் திகதியன்று சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் ஜெயலலிதாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
மக்கள் மதிக்கும் ஒரு தலைவராக தாம் இருக்கும் போது தம்மை இழிவுபடுத்தும் வகையில் இந்தக்கருத்துக்கள் இருப்பதாக ஜெயலலிதா தமது மனுக்களில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த 17ஆம் திகதியன்றும் ஜெயலலிதா, சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சுவாமியை ஒக்டோபர் 30ஆம் திகதியன்று ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை விடுவிக்கவும் அவர்களின் படகுகளை தடுக்க வைக்கவும் தாம் இலங்கை அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறியதாக சுவாமி தெரிவித்த தகவலின் பின்னர் ஜெயலலிதா அதனை கண்டித்திருந்தார்.
இதனையடுத்து ஜெயலலிதா மீது சுவாமி அவதூறை மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment