அரசியல் தஞ்சம் கோரி நாட்டில் தங்கியிருந்த பாகிஸ்தான் நாட்டு பிரஜைகளை நாடு கடத்துவதற்கு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நேற்று நீக்கப்பட்டது.
அரசு சார்பில் ஆஜராகிய பிரதி சொலிஸ்டர் நாயகம் ஜனகத் சில்வாவினால் முன்வைக்கப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து மேல் நீதிமன்றத்தால் இடைக்கால தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்படிக்கைக்கு அமைய பாகிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்துவதால் நாட்டின் சட்டத்திற்கு பாதிப்பு இல்லை என பிரதி சொலிஸ்டர் நாயகம் விசாரணைகளின் போது நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிய பெண்ணொருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் ஆராய்ந்து, கடந்த 22ஆம் திகதி மேல் நீதிமன்றத்தால் பாகிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்துவதற்கு இலங்கை அரசுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், மேல்நீதிமன்றத்தால் இலங்கை அரசுக்கு விடுக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீக்கப்பட்டு, பாகிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்துவதற்கு மேல் நீதிமன்றத்தால் நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment