நாமக்கல் அருகே காவல் நிலையம் ஒன்றில் விபத்து, திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பரிகாரத்திற்காக கிடா வெட்டி பொலிசார் ரகசிய பூஜை செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றிய பல தொடர்ந்து பொலிசார் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர்.
மேலும் இந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்கள், சாலை விபத்துகளும் தொடர்ந்து நடந்ததால் பொலிசார் மன உளைச்சல் அடைந்துள்ளனர்.
இதையொட்டி, நேற்று அதிகாலை பொலிஸ் நிலைய வளாகத்தில் கிடா வெட்டி ரகசிய பூஜை நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், கடந்த வாரம் நடைபெற்ற சாலை விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் இறந்தனர். அந்த வாகனங்கள் காவல் நிலையத்தில் தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், தினமும் எலுமிச்சம் பழத்தை அறுத்து அதன் சாற்றை காவல் நிலையத்தில் தெளித்து வருகிறோம், அது போல் தான் நேற்றும் நடந்தது என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காவல் நிலையத்தில் கிடா வெட்டும்போது பணியில் இருந்த எஸ்எஸ்ஐ ராஜேந்திரன், ஏட்டு அருள் இருவரை மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாறுதல் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்
0 கருத்துகள்:
Post a Comment