Search This Blog n

28 September 2014

அடுத்த முதல்வர் யார்? ஜெயலலிதாவிடம் ஆலோசனை!

அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவை சந்திக்க தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பெங்களூர் புறப்பட்டு சென்றுள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறியது.
பின்னர் ஜெயலலிதாவும் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் தானாகவே முதலமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ.பதவியையும் இழந்து விட்டார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.
அத்துடன் அவர்களுக்கு விதிக்கப்படும் சிறை தண்டனை காலமும் சேர்த்து கணக்கிடப்படும். ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதால் அவர் மொத்தம் 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.
தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான மனு கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
இந்நிலையில் தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் புறப்பட்டுச் சென்றனர்.
பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவை சந்திக்க உள்ள அவர்கள் அடுத்த தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக யாரை நியமிப்பது? மேலும், இதர அரசு நடவடிக்கைகள் குறித்து ஜெயலலிதாவிடம் ஆலோசனை நடத்துகின்றனர்.

 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment