தமிழக மீனவர்களின் இயந்திரப் படகுகளில் பெரும்பாலும் திமுகவின் டி.ஆர். பாலு மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமானது என்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமி தந்தி தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில்,
இலங்கைக்கு தான் சென்று மகிந்த ராஜபக்சேவை சந்தித்த போது தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள்.. அவர்கள் தொழிலாளர்கள். அதனால் விடுவித்துவிடுங்கள். ஆனால் அவர்களது படகுகளின் உரிமையாளர்கள் பணக்காரர்கள். அதை வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். அதைத்தான் இலங்கை அரசு செய்து கொண்டிருக்கிறது என்று கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. இது குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்து கடிதமும் அனுப்பியிருந்தார்.
என்னை பற்றி, முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்துக்கு, பதில் கடிதத்தை மோடிக்கு நான்அனுப்பி உள்ளேன். அதில் பல விவரங்களை தெளிவாக கூறியுள்ளேன்.
பிரதமருக்கு சுவாமி விளக்க கடிதம்
இலங்கையில், ராஜபக் ஷேவை சந்தித்தபோது, தமிழக மீனவர் பிரச்னை குறித்து, அவரிடம் பேசினேன். அப்போது, சிறையில் உள்ள தமிழக மீனவர்களை, ஜாமினில் விடுதலை செய்வதாகவும், அவர்களிடம் பறிமுதல் செய்த இயந்திர படகுகளை விடுவிப்பதாகவும் உறுதி அளித்தார்.
இதற்கிடையே, தமிழக மீனவர்கள் சங்கம் சார்பில், என்னிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.அதில், இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்றபோது, அந்நாட்டு கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட, இயந்திரப் படகுகளை விடுவிக்க வலியுறுத்துமாறு தெரிவித்திருந்தனர். ஆனால், இக்கோரிக்கையை நான் ஏற்கவில்லை.
இந்த இயந்திரப் படகுகள் பெரும்பாலும்,தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவுக்கு சொந்தமானவை. இவர்கள், வசதி படைத்தவர்கள் என்பதால், அந்த படகுகளை விடுவிக்க, நான் வலியுறுத்தவில்லை
என் கோரிக்கை எல்லாம், பாதுகாப்பற்ற ஏழை மீனவர்களை விடுக்க வேண்டும் என்பது தான்.என் கோரிக்கையின் படி, தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதை, ஜெயலலிதா, தனது வெற்றி என, அபகரிக்க முயற்சிக்கிறார்.
இப்பவும் கூறுகிறேன்... நான் தான், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம் பேசி, இலங்கையில் சிறைபட்டிருந்த, தமிழக மீனவர்களை விடுவித்தேன். அதற்காக நான், ராஜபக்ஷேவிடம் பேசிய போது, அவர் அதிர்ச்சிகரமான பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதன்பின் தான், நான், 'அப்படியென்றால், மீனவர்களை மட்டும் விடுதலை செய்யுங்கள்; அவர்களின் விசைப்படகுகளை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்' என, கூறினேன். அதன்படியே, அவரும் செய்தார்.
தமிழகத்தில், மீன் பிடி தொழிலில் இப்போது பெரிய பெரிய விசைப்படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த படகுகளில் பெரும்பாலானவை, சசிகலா, டி.ஆர்.பாலு ஆகியோருக்கு சொந்தமானவை. அவர்கள் தான் மீனவர்களை தூண்டிவிட்டு, பெரிய அளவில் மீன்பிடிக்க வைக்கின்றனர்.
இப்படி விசைப்படகுகள் மூலம் மீன்பிடித்ததால், இந்திய கடல் எல்லையில் இருந்த மொத்த மீன் வளமும் போய் விட்டது. இப்போது, இலங்கை கடல்பகுதியில் தான் மீன் வளம் இருக்கிறது என்பதால், விசைப்படகுகள் மூலம், மீனுக்காக, இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகின்றனர். இதனால் தான், நம் மீனவர்களையும் விசைப் படகுகளையும் சிறை பிடிக்கின்றனர்
தமிழக அரசியல் பிரபலங்கள் குறித்து, ராஜபக்ஷே, என்னிடம் கூறிய தகவல்கள் அனைத்தையும், பிரதமர் மோடியிடம் சொல்லிவிட்டேன்.
இலங்கை தமிழ் எம்.பி.,க்கள் குழு, டில்லிக்கு வந்து பிரதமர் மோடியை சந்தித்தது. அப்போது, 'தனி ஈழம் அமைய, நீங்கள் உதவ வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதற்கு மோடி என்ன கூறினார் தெரியுமா?
'ஒன்றுபட்ட இலங்கையின் அமைதிக்குத் தான் இந்தியா உதவும். இலங்கைப் பிரிவினைக்கு, இந்திய அரசு உதவாது. இலங்கையில், எல்லா மக்களும் அமைதியாக வாழ, ராஜபக்ஷேவிடம் வலியுறுத்துவோம். மற்றப்படி, ராஜபக்ஷே மட்டும் தான் பிரச்னைகளை தீர்க்க முடியும். அதனால், அவரிடம் பேசி நல்ல முடிவெடுங்கள்' என, தெள்ளத் தெளிவாக கூறி விட்டார்.
அதன்பின் தான், அவர்கள், இங்கிருக்கும் கருணாநிதி, வைகோ, ஜெயலலிதா என, யாரையும் சந்திக்காமல், இலங்கை திரும்பி விட்டனர். தமிழகத்தில் நடக்கும் சம்பவங்களால், இலங்கை அரசு, இங்கிருப்பவர்களை நன்றி இல்லாதவர்களாக நினைத்துத் தான் மீண்டும் மீனவர்களை கைது செய்திருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
நான் மீனவர்களை விடுதலை செய்தது ஜெயலலிதாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முந்தைய ஆட்சியிலும் சரி தற்போதும் சரி மீனவர்களை விடுதலை செய்யக் கோரி கடிதம் எழுதியதைத் தவிர வேறு ஒன்றும் ஜெயலலிதா செய்யவில்லை. இது வரும் சட்டசபை தேர்தலில் அவருக்கு எதிர்ப்பாக அமையும் என்று கருதுகிறார்.
ஜெயலலிதா திரைத்துறையைச் சேர்ந்தவர். அவர் எழுதி வைக்கப்பட்ட ஸ்கிரிப்டைத்தான் படிப்பார். நான் அப்படி எல்லாம் சொல்லவில்லை. நான் மீனவர்கள் நலனுக்காகத்தான் செயல்படுகிறேன். அதனால் பலருக்கு என்னைப் பிடிக்கவில்லை.
'தமிழக சட்டசபை தேர்தலுக்காக, மீனவர் பிரச்னையை, முதல்வர் ஜெயலலிதா அரசியலாக்குகிறார். இதற்காக, எல்லாமே தன்னால் தான் நடந்ததாகக் கூறி, பெருமை சேர்க்கிறார்' என, பிரதமர் மோடிக்கு, சுப்ரமணிய சாமி எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எனது கடின உழைப்பினால், தமிழகத்துக்கு கிடைத்த வெற்றிகளை, அவரால் கிடைத்த வெற்றி என, தவறாக பிரசாரம் செய்கிறார்.
கடந்த காலங்களில் என்னுடைய கடினமான முயற்சியால் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை, நாடாளுமன்றத்தில் தேவர் சிலை அமைப்பு, ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்றவை நடந்தன. ஆனால் தன்னால்தான் எல்லாமே நடந்ததாக உரிமை கொண்டாடினார்
ஜெயலலிதா. ராம்சேதுவைக் கூட தானே காப்பாற்றியதாகவும் கூறிக் கொண்டார். இந்த பிரச்சனைகளில் கடினமாக நான் உழைத்த போதும் இதை எல்லாம் நான் பெரிதுபடுத்தவில்லை.
வரும் தமிழக சட்டசபை தேர்தலில் மேற்கு வங்கத்தைப் போல பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என்று தங்களை கேட்டுக் கொள்கிறேன். அப்படி செய்தால் காமராஜர் காலத்துக்குப் பின்னர் தமிழகத்தில் தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்கும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment