அன்புமிகு ஜெயலலிதா அம்மையாருக்கு அன்பு வணக்கம். பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தங்களுக்கு விதித்த தீர்ப்பறிந்து ஈழத்தமிழர்களாகிய நாம் அதிர்ந்து போனோம். ஏன்தான் இப்படியயன்று நொந்து கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியேதுமில்லை.
தமிழர்களை நீதியும் அநீதியும் வாட்டுவதுதான் வேதனையிலும் வேதனை. தமிழகத்தின் முதலமைச்சர் என்ற பதவியிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக நீங்கள் குரல் கொடுத்ததை மறந்து விட முடியாது.
2009 ஆம் ஆண்டில் ஈழத்தமிழர்கள் இலங்கையில் வதைபட்டபோது, நீங்கள் முதலமைச்சராக இருந்திருந்தால் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.
கெடுகாலம். நாடக நடிகர் கலைஞர் கருணாநிதி பதவியிலிருந்தார். வன்னி யுத்தம் முடிந்து எதுவெல்லாம் நடக்கக் கூடாதோ அதுவெல்லாம் நடந்து ஈழத் தமிழினம் அழுவதற்கும் உரிமையின்றி துடித்து ஓய்ந்தபோது, கலைஞர் பதவிக்கதிரையில் இருந்து இறங்கினார்.
இருந்தும் சோனியாவின் ஆட்சி நமக்குப் பாதகமாகவே அமைந்திருந்தது. இதற்கும் முடிவு வந்து மோடி பிரதமராக,
தமிழகத்தில் நீங்கள் அமோக வெற்றி பெற்று பாரதத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது பெரும்பான்மைக் கட்சி என்றிருந்த வேளை நாங்கள் புளகாங்கிதம் உற்றிருந்தோம். என்ன செய்வது! இப்படி ஓர் இடி விழுமென்று யார்தான் நினைத்தார்கள்?
எங்கள் தொடர்பில் பிரதமர் மோடிக்கு நீங்கள் அனுப்பிய கடிதங்கள், சட்டசபையில் எடுத்த தீர்மானங்கள் இதற்கெல்லாம் அப்பால் தமிழகத்தில் தற்போது நீங்கள் மேற்கொண்டு வரும் அபரிதமான அபிவிருத்திப் பணிகள் என அனைத்தையும் வியந்து பார்த்து நின்ற வேளை, தமிழர்களின் தலைவிதி இதுதான் என்பதாக நீதிமன்றத் தீர்ப்பு அமைந்து போயிற்று.
ஆம் தாயே! சுப்பிரமணிய சுவாமி என்ற துச்சாதனன் தமிழர்களின் துகில் உரிவதற்காக இலங்கைக்கு வந்து போன செய்தி அறிந்திருப்பீர்கள். அநீதியின் வடிவமாகிய சுப்பிரமணிய சுவாமி வென்றார் என்பதை ஒருபோதும் ஜீரணிக்க முடியவில்லை.
இவையயல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் மோடிக்கு எழுதிய கடிதங்களை கிண்டல் செய்தவர்களுக்குப் பாடம் புகட்டுவீர்கள் என்று நம்பினோம்.
எங்கள் நம்பிக்கைகள் நடுவானில் அறுந்து வீழ்வதுதான் விதியயன்றாகிவிட்ட பின்னர் அழுது புலம்புவதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்?
நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாகயிருந்தாலும் நீங்கள் தான் தமிழகத்தின் முதல்வர்.
ஆம்! சட்டசபைக்குச் செல்லாத முதல்வர் தமிழகத்தில் இருந்தார் என்றால் அது நீங்களா கத்தான் இருக்க முடியும் என்ற சரித்திர வரலாற்றைப் பதிவு செய்வதோடு, தங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பால் வெதும்பும் ஈழத்தமிழர்களின் ஏக்கத்தையும் இக் கடிதம் வாயிலாகப் பதிவு செய்கிறோம்.
0 கருத்துகள்:
Post a Comment