This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

28 October 2015

இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்!

இலங்கை சிறைகளில் உள்ள 120  இந்திய மீனவர்களை விடுதலை செய்யவுள்ளதாக வெளியுறவுத்துறை  அமைச்சின் பேச்சாளர் மஹிசினி கொலன்னே தெரிவித்துள்ளார். மீனவர்கள் கைதுசெய்யப்பட்டால் உடனடியாக அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று ஏற்கனவே இரண்டு நாடுகளுக்கு இடையிலும் எட்டப்பட்ட இணக்கத்தின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக மஹிசினி தெரிவித்துள்ளார். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

27 October 2015

11 இந்திய மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த இந்திய மீனவர்கள் 11 பேரும் 3 படகுகளில்  இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் குறித்த 11 இந்திய மீனவர்களையும் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்து...

25 October 2015

டேஜாஸ் விமானத்தை இலங்கைக்கு வழங்க இந்தியா பரிந்துரை

இலங்கைக்கு வழங்குவதற்காக தமது உள்நாட்டு போர் விமானம் ஒன்றை இந்தியா பரிந்துரை செய்துள்ளது. “டேஜாஸ்” என்ற சுப்பர்சொனிக் சண்டை விமானமே இலங்கையின் விமானப்படைக்கு வழங்க பரிந்துரை  செய்யப்பட்டுள்ளது. விமானக் கொள்வனவு உட்பட்ட விடயங்களுக்காக இலங்கையின் விமானப்படை தளபதி எயார் மார்சல் ககன் புலத்சிங்கள எதிர்வரும் மாதத்தில் பாகிஸ்தான் செல்லவுள்ளார். இந்தநிலையிலேயே இந்தியாவும் இலங்கைக்கு போர் விமானம் ஒன்றை வழங்க முன்வந்துள்ளது. இலங்கையை பொறுத்தவரை...

22 October 2015

அரசு பேருந்து ஓட்டுநர்கள் போலி ஆவணங்கள் உடன் பணியில்?

(டி.என்.என்) சிவகங்கை மாவட்டத்தில், போலி ஆவணங்கள் மூலம் பணியில் சேர்ந்த, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து ஓட்டுநர்கள் 15 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி கிளை, சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர், தேவகோட்டை பழுதுபார்க்கும் மையம், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் டவுன், புறநகர் கிளைகள், கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி, ராமேசுவரம் மற்றும் மதுரை  ஆகிய 12 கிளைகள் உள்ளன. இந்தக்கிளைகளில்...

ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலி : பஸ் மற்றும் லாரி டிரைவர்கள் கைது

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் திருச்சி வழியாக நாகர்கோவிலுக்கு சென்ற அரசு விரைவு பஸ் திருச்சி அருகே ரோட்ரோரம் நின்றிருந்த டிரெய்லர் லாரி மீது மோதிய விபத்தில் 9 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர். பெல் நிறுவனத்திற்கு இரும்பு பிளேட்டுகளை ஏற்றிச்சென்ற லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னால் வந்த பஸ் டிரைவர் கவனிக்காமல் அதன் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது. லாரியில் இருந்த இரும்பு பிளேட்டுகள் பஸ்சின் இடது புற...

20 October 2015

ஒற்றுமையாக செயல்படுவோம் ‘‘வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்’

‘நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம் என்றும் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்’’, என்றும் நடிகர் விஷால் கூறினார். கடுமையாக உழைத்தோம் நடிகர் சங்க பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஷால் நேற்று மாலை தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம்  வருமாறு:– கேள்வி:– நடிகர் சங்க தேர்தல் வெற்றியை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்? பதில்:– மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது....

19 October 2015

நடிகர் சங்க தேர்தலில் பரபரப்பான முடிவு; பொதுச்செயலாளராக விஷால் ; நாசர் தலைவர் ?

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.  தேர்தல் 2015-2018-ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், நாசர் தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிட்டன. தலைவர் பதவிக்கு சரத்குமார், நாசர் (பாண்டவர் அணி) ஆகிய இருவரும் போட்டியிட்டார்கள். சரத்குமார் அணியில் பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவியும், நாசர் அணியில் விஷாலும் போட்டியிட்டனர். 2 துணைத்தலைவர்கள் பதவிக்கு சரத்குமார்...

17 October 2015

என் கணவனுக்கு20க்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் தொடர்பு?

திருமணமான இளைஞர் ஒருவர் 20க்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளதை கண்டுபிடித்த மனைவி பொலிசில் புகார் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் சிறுபூலுவபட்டியை சேர்ந்த சல்மா (19) என்பவருக்கும், கோபி குருமந்தூரை சேர்ந்த நிவாசுக்கும் (26) கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. கடந்த 3 மாதங்களாக சல்மாவிடம், கூடுதல் வரதட்சணை கேட்டு நிவாசும், அவரது தாயார் குர்ஷித் உன்னிசாவும் கொடுமைப் படுத்தியுள்ளனர். மேலும், சல்மாவை ஆபாசப்படம் எடுக்க நிவாஸ்...

ஒருவரை மாடுகளை கடத்திச் சென்றதாகஅடித்தே கொன்ற கும்பல்!!

இமாச்சல பிரதேச மாநிலத்தில் மாடுகளை கடத்திச் சென்றதாக 5 பேரை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கியதில், ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சிரமவுர் என்ற ஊரில் இருந்து லொறியில் மாடுகளை ஏற்றிச் சென்ற 5 பேரை வழிமறித்த கும்பல், அவர்களை கடுமையாக  தாக்கியுள்ளது. இந்த கொடூரத் தாக்குதலில் காயமடைந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நோமன் (28) என்பவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர். தற்போது...

நாசா’ கவுரவிப்பு புதிய பாக்டீரியாவுக்கு அப்துல் கலாம் பெயர்;

வேற்று கிரகத்தில் உயிரினங்கள் இருக்கின்றனவா என்பது பற்றி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’ ஆராய்ந்து  வருகிறது. இந்த குழுவுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானி கஸ்தூரி வெங்கடேசன் தலைமை தாங்குகிறார். இந்த குழு, சர்வதேச விண்வெளி மையத்தில் பாக்டீரியா ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இந்த பாக்டீரியாவுக்கு, மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பெயரை சூட்டி ‘நாசா’  கவுரவித்துள்ளது. இதை தனியார் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த...

14 October 2015

என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்=

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்று துணை வேந்தர் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பு முகாம் அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் கடந்த 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரையிலும் பல்கலைக்கழக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ‘அசென்டர்’, ‘காக்னிசன்ட்’, ‘ஐ.பி.எம்.’, ‘இன்போசிஸ்’...

13 October 2015

ஒரு பவுன் ரூ.20,088-க்கு விற்பனை தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்தது

நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 526-க்கும், ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 208-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை நேர நிலவரப்படி, தங்கம் விலை சரிந்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.15-ம், பவுனுக்கு ரூ.120-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 511-க்கும், ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 88-க்கும் விற்பனை ஆனது. தங்கம் விலை குறைவை போலவே, வெள்ளி விலையும் நேற்று குறைந்து காணப்பட்டது. கிராமுக்கு 50 காசும், கிலோவுக்கு ரூ.495-ம்...

11 October 2015

சாலை விபத்தில் 4 நிமிடங்களுக்கும் ஒருவர் உயிரிழக்கிறார் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு நபர் சாலைகளில் ஏற்படும் விபத்துகளால் உயிரிழந்து வருவதாக புள்ளிவிபரம் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய சாலை போக்குவரத்து அமைப்பாக கருதப்பட்டு வருவது இந்திய சாலைகளில் ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு நபர் சாலைகளில் ஏற்படும் விபத்துகளால் உயிரிழந்து வருவதாக புள்ளிவிபரம் வெளியாகி உள்ளது. 'இந்தியன்ஸ் ஃபார் ரோடு சேப்டி' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய...

தொழிலாளர்களின் 'மனம் திறந்த பேச்சை' எப்போது கேட்கப்போகிறார் மோடி

வெளிநாடுகளுக்கு சென்று அம்மக்களோடு பேசும் மோடி, நம் நாட்டு மக்களோடு 'மனம் திறந்த பேச்சு' நிகழ்ச்சி மூலம் பேசுகிறார். நமதுநாட்டின் விவசாயிகள், தொழிலாளர்களின் 'மனம் திறந்த பேச்சை' எப்போது கேட்கப்போகிறார் மோடி என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார். ஹாவேரி மாவட்டம், ரானேபென்னூர் வட்டம், கதகூர் கிராமத்தில் நடந்த காங்கிரஸ் மகளிர் மற்றும் விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியது: பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான 3 - 4...

10 October 2015

கிராபிக்ஸ்’ மு.க.ஸ்டாலின் ஆட்டோ டிரைவரை தாக்கியதாக பேட்டி

தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே திட்ட பயணத்தை கோவையில் நேற்றுக்காலை தொடங்கினார். முன்னதாக ரேஸ்கோர்ஸ் நடைபயிற்சி பாதையில் காலை 6.30 மணியளவில் நடைபயிற்சி மேற்கொண்டார். சுமார் 2½ கிலோ மீட்டர் தூரமுள்ள நடைபயிற்சி பாதையில் நடந்து சென்ற அவருடன் நடைபயிற்சிக்கு வந்த பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் கைகுலுக்கினார்கள். அவர்கள் மு.க.ஸ்டாலினுடன் செல்போனில் ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர். கிராபிக்ஸ்  பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– எனது...

08 October 2015

சிறைச்சாலையில் குழு மோதல்: இரு கைதிகள் பலி

உயர் பாதுகாப்பு மிக்க டெல்லி திஹார் சிறைச்சாலையில் ஏற்பட்ட குழு மோதலில் இரு கைதிகள் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறைக் கைதிகளான ஈஸ்வர், விஜய், சகாதாப் ஆகிய மூவர் அங்குள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பரிசோதனைகள் முடிந்த பின்னர், மீண்டும் சிறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அப்போது, சிறைச்சாலைக்குள் மறைந்திருந்த அனில், வாசு, சந்தீப் ஆகிய மேலும் மூன்று கைதிகள், மருத்துவ பரிசோதனைக்கு சென்று திரும்பிய...

வர்த்தகத்தினை மேம்படுத்த இந்திய யாழில் விசேட மாநாடு?

 யாழ். மாவட்டத்தில் இந்திய வர்த்தகத்தினை மேம்படுத்துவதற்கான விஷேட மாநாடு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இலங்கைக்கான இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். ரில்கோ சிற்றி ஹோட்டலில் இந்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இந்தியாவைச் சேர்ந்த இளம் வர்த்தகர்கள் 44 பேர் யாழிற்கு வருகை தந்துள்ளனர். ‘யாழில் வியாபாரத்தினை மேம்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில், இந்த மாநாடு நடைபெற்று வருகின்றது. இந்த மாநாட்டில், இலங்கைக்கான இந்திய...

07 October 2015

மெது மெதுவாகக்ஈழத்தமிழரை கொலை செய்யும் அரசு!!

கடந்த 01.10.2015 அன்று முதல் திருச்சி சித்ரவதை சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்து உறவுகள்... தமது விடுதலையை வேண்டி சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொணடு வருகின்றனர். இன்றுடன் ஐந்து நாட்களாகியும் எந்தவொரு அரசு  அதிகாரிகளும் வந்து பார்வையாடாமல்... தமது தேகத்தை பட்டினி போட்டு உருக்கி வரும் நம் உறவுகளின் உடல்நிலை சீரற்றுப் போவதால்... இன்று மருத்துவ அதிகாரிகள் சென்று உடல் பரிசோதனை செய்துள்ளார்கள். சோதனையின் பின் மருத்துவர்களின்...

03 October 2015

இரண்டு பப்பாளி பழங்களை திருடியவரை தேடும் போலீஸ்

டெல்லியில் உள்ள பிஜு ஜனதா எம்.பி. மாளிகையில் இருந்து  இரண்டு பப்பாளி பழங்களை திருடியவரை தீவிரமாக போலீஸ் தேடிவருகிறது. ஒடிசாவை சேர்ந்த பிஜு ஜனதா எம்.பி. அர்ஜூன் சரண் சேத்தியின் டெல்லி மாளிகையிலிருந்து மர்ம நபர் ஒருவர் இரண்டு பப்பாளி பழங்களை திருடியுள்ளார். அவரை எம்.பி.யிம் மகனும், பாதுகாவலர்களும் பிடித்துள்ளனர். ஆனால் அந்த நபர் போலீஸ் வருவதற்குள் எப்படியோ தப்பிவிட்டார்.  தற்போது அந்த மர்ம நபர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து,...