Search This Blog n

07 June 2013

8 வயது சிறுமியை சீரழித்த 14 வயது மாணவன்: உறவினர்கள்



புதுச்சேரியில் 8 வயது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியின் அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி.
இவருக்கு நாராயணன் என்ற 10 வயது மகனும், சுமதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 8 வயது மகளும் உள்ளனர்.
இவர்கள் இருவரும் மணவெளியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
கணவர் இல்லாத தமிழ்செல்வி கூலித் தொழில் செய்து குழந்தைகளை காப்பாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு சிறுவன் நாராயணன் தனது தங்கை சுமதியை அழைத்து கொண்டு கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது மணவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் பிரகாஷ் என்ற மாணவன், நாரயணனையும் சுமதியையும் நிறுத்தி பேச்சு கொடுத்துள்ளான்.
நாராயணனை மட்டும் கடைக்கு போக சொல்லிவிட்டு சுமதியை யாரும் இல்லாத மறைவிடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இந்த சம்பவத்தை சுமதி அழுது கொண்டே தனது தாய் தமிழ்செல்வியிடம் கூறியிருக்கிறார். அதையடுத்து தமிழ்செல்வி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் அரியாங்குப்பம் பொலிசார் பிரகாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிறுமி சுமதியை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தர வேண்டும் என கோரி உறவினர்களும் அந்த பகுதி பொதுமக்களும் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
 

0 கருத்துகள்:

Post a Comment