இந்தியாவின் ஒடிசாவில், குடிபோதையில், தள்ளாடியபடி மணமேடைக்கு வந்த மணமகனை, மணமகள் புறக்கணித்து வெளியேறிய சம்பவம் நடந்துள்ளது.
சப்பள்ளி என்ற கிராமத்தில் நேற்று முன்தினம், பர்வத் மல்லிக், 26, என்ற மணமகனுக்கும், 22 வயது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மண்டபத்தில், மணமகள், மங்கல தருணத்திற்காக காத்திருந்த போது, மதுபானம் ஏராளமாக அருந்தியதால், தள்ளாடிய படி, மேடையில் ஏறினான், மணமகன் பர்வத்.
இதைப் பார்த்த மணமகள், கழுத்தில் போட்டிருந்த மாலையை கழற்றி, வீசி எறிந்து விட்டு, மேடையை விட்டு கீழிறங்கினாள். "திருமண நாள் அன்றே மது அருந்தி, சுயநினைவு இல்லாமல் இருக்கும் இவனை திருமணம் செய்ய மாட்டேன்' என தெரிவித்து, தன் உறவினர்களுடன் வெளியேறினாள்.
இதை அறிந்த பொலிஸ் மற்றும் மகளிர் அமைப்புகள், மணமகன் குடும்பத்தினரை கண்டித்தனர்.
0 கருத்துகள்:
Post a Comment