திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட தம்பதி படுகொலை செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம் கோவளப் பகுதியை சேர்ந்தவர் திவாகரன்(வயது 70). இவர் திரேசம்மாள் என்ற 76 வயது மூதாட்டியுடன் தனியாக வசித்து வந்தார்.
35 ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் தங்களது குடும்பம், குழந்தைளை விட்டுப் பிரிந்து வந்து வாழத் தொடங்கினர்.
திருமணம் செய்து கொள்ளாமலேயே இணைந்து வாழ்ந்து வந்த இந்த தம்பதி, கோட்டக்கல் பகுதிக்கு இடம் பெயர்ந்தனர்.
சில நாட்களாக இவர்கள் இருந்து வந்த வீடு திறக்கப்படாமல் இருந்ததுடன், வீட்டிலிருந்து துர்நாற்றமும் வந்தது.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்த போது இருவரும் பிணமாக கிடந்தனர்.
அப்போது, உடலில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்தன. ரத்தம் வழிந்தோடி உறைந்து கிடந்தது.
ஏன் இவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறித்துத் தெரியவில்லை. வீட்டில் திருட்டு போகவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே கொலை செய்திருக்கலாமோ என்று பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்
0 கருத்துகள்:
Post a Comment