இந்து முறைப்படி சீன பெண்ணை கரம் பிடித்தார் தமிழக வாலிபர் ஒருவர்.
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த தொப்பையன்குளத்தை சேர்ந்தவர் வாசுதேவன், விவசாயி.
இவரது மகன் வெங்கடேசன்(வயது 29), கேட்டரிங் படித்தவர்.
இவர் 6 ஆண்டுகளுக்கு முன் சீன நாட்டில் குவைஹவா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மின்ஹால்-குவாயின் மகள் ஷியாகுவ்வா(வயது 28) என்பவரை காதலித்தார்.
இதனையடுத்து கடந்தாண்டு ஏப்ரல் 6ம் திகதி பதிவுத் திருமணம் செய்து கொண்டு இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் வெங்கடேசனின் பெற்றோர், இந்து முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதால், இருவரும் தமிழகம் வந்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று காலை 7:15 மணிக்கு ஷியாகுவ்வா கழுத்தில் வெங்கடேசன் தாலி கட்டினார்.
வெங்கடேசன் கூறுகையில், சைனீஸ் மொழி சரளமாகவும், ஆங்கிலம், ஹிந்தி கொஞ்சமாகவும் பேச தெரியும்.
சீன பெண்ணை மணந்ததால் என் பெற்றோர் வருத்தப்பட்டனர்.
பெண்ணுக்கு சீன மொழி மட்டுமே தெரியும். அதனால் உறவினர்களுடன் பேச முடியவில்லை, அது தான் வருத்தமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
Post a Comment