பிரபல பாலிவுட் நடிகை ஜியா கான் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியில் வெளியான கஜினி, அமிதாப் பச்சனின் நிசாபாத், அக்சய்குமாரின் ஹவுஸ்புல் உள்ளிட்ட இந்தி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஜியாகான்(24).
மும்பை ஜூகூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று இரவு 11.45 மணியளவில் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் பொலிசிற்கு தெரிவித்தார்.
இதையடுத்து ஜூகூ காவல் நிலைய பொலிசார், அவரது வீ்ட்டிற்கு சென்று, படுக்கையறையில் பேனில் தூக்கிட்டு பிணமாக தொங்கிய நிலையில் இருந்த நடிகை ஜியாகான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கான காரணம் குறி்த்து பொலிசார் விசாரித்து வருகின்றனர். கடைசியாக ஜியாகான் மொபைலில் யாருடன் பேசினார், அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசியவர்கள் யார் என்பதும் குறித்தும், அவரது வீட்டிற்கு கடைசியாக வந்து சென்றவர்கள் யார் என்பதும் குறித்தும் காவலாளியிடம் விசாரணை நடக்கிறது
0 கருத்துகள்:
Post a Comment