நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி ஒரு கோடி ரூபா நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் விஜய் 3 ஆயிரத்து 900 ஆயிரம் ஏழைகளுக்கு நல உதவிகள், ஏழை மாணவ - மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை, கணனிகள், ஏழை பெண்களுக்கு தையல் எந்திரம், ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள் போன்றவற்றை வழங்குவதாக இருந்தது.
இவ்விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை புறப்பட தயாரானார்கள். விழாவுக்காக மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி விளையாட்டு மைதா னத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் நடந்தன.
ரசிகர்கள் விஜய்யின் கட்-அவுட்களையும் அமைத்து வந்தனர். இந்த நிலையில் இன்று இவ்விழா ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் இதுகுறித்து கூறும்போது,
எதிர்வரும் 8-ந்தேதி நடக்கவிருந்த விஜய் ஒரு கோடி ரூபா நலத்திட்ட பணிகள் வழங்கும் விழா ரத்தாகியுள்ளது. எனவே வெளியூர்களில் இருந்து ரசிகர்கள் யாரும் சென்னை வரவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு இந்த விழா அடித்தளம் என்று பரபரப்பாக எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த நிலையில், ரத்தாகியுள்ளதால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்
0 கருத்துகள்:
Post a Comment