பாகிஸ்தானில் சினிமா நடிகை ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த நடிகை புஷ்ரா(வயது 18), திரைப்படங்கள் உட்பட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு அவரது இல்லத்தில் உறங்கி கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து, புஷ்ரா முகத்தில் ஆசிட்டை ஊற்றியுள்ளான்.
இதனையடுத்து புஷ்ரா உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து மருத்துவர்கள், புஷ்ராவின் முகம், கழுத்து ஆகியவற்றில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அவரது சகோதரர் அளித்த புகாரில், உள்ளூர் நாடக தயாரிப்பாளர் ஒருவர் புஷ்ராவை மணந்து கொள்ள விரும்பியதாகவும், ஆனால் அதற்கு மறுப்புத் தெரிவித்ததால் அவர் தான் இதுபோன்ற காரியத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment