சிறிலங்காவின் சமகால அரசியல் நடவடிக்கையால் இந்தியா பெரும் அதிருப்தி அடைந்துள்ளது.
இந்நிலையில் குழம்பிப்போயுள்ள இந்தியாவுடன் பேச்சு நடத்தி, சமரசத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமைச்சர் பசில் ராஜபக்ச அடுத்தவாரம் புதுடில்லிக்கு செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்த சிறிலங்கா அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து இந்தியா கவலையையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ள நிலையிலேயே பஸில் ராஜபக்சவை புதுடெல்லிக்கு அனுப்பும் முடிவை ஜனாதிபதி மஹிந்த எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தமாதம் 4ஆம் திகதி பசில் ராஜபக்ஷ புதுடெல்லி செல்லவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் தற்போதைய நிலவரங்கள் குறித்து அவர் இந்தியத் தலைவர்களுக்கு எடுத்து விளக்கவுள்ளார்.
இதேவேளை அடுத்த மாதம் ஏழாம் திகதி கொழும்பு வரவுள்ள இந்திய பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், 13வது திருத்தச்சட்ட விவகாரம் குறித்து சிறிலங்கா தரப்புடன் பேசுவார் என்று இந்தியத்தரப்பில் அறிவிக்கப்பட்டுள் நிலையில் பசில் ராஜபக்ஷவின் விஜயம் அமைந்துள்ளது
0 கருத்துகள்:
Post a Comment