திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டியின் அலுவலகத்தில், தொலைபேசி அழைப்புகளை பெறும் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக பணியாற்றி வந்தவர் கே.பி.கிரீஷ் குமார்.
தனது குறையை தெரிவிப்பதற்காக முதல்-மந்திரி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசிய ஒரு பெண்ணிடம் கே.பி.கிரீஷ் குமார் பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கை வந்ததை தொடர்ந்து கே.பி.கிரீஷ் குமார் வேலையில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சரிதா நாயர் என்ற பெண்ணுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசியதாக உம்மன்சாண்டியின் உதவியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகியோர் சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது, அவரது அலுவலக ஒப்பந்த ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
0 கருத்துகள்:
Post a Comment