கதிர்காமம் சைவ சமயத்தவர்களின் புனித பிரதேசமாக இருந்து வந்தது. இதனை, படிப்படியாக சிங்கள மயமாக்கியது பௌத்த பேரினவாதம். மதகுருமாரும் பூசை முறைகளும் மாறிய போதும் இறைவிக்கிரங்கள் ஏதோவொருவகையில் இருந்து வந்தது. இந்த நிலையில் செல்லக் கதிர்காமம் ஈஸ்வர ஆலயத்தின் பிரதம குருவே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியில் காயங்களுடன் பிரதம குருவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது. சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டதாகவும், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சிங்கள பௌத்தம் தவிர்ந்த அனைத்து இனங்களினதும் மதங்களினதும் அடையாளங்களை அழிப்பதில் சிங்கள ராவய மற்றும் பொதுபல சேன போன்ற சிங்கள இனவெறி அமைப்புக்கள் தீவிரமாக செயற்பாட்டு வருகின்றன. இந்த அடிப்படையில் பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:
Post a Comment