This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

31 October 2014

விமான நிலையத்தில் தங்கம் கடத்த முயற்சித்த இருவர் கைது

இந்தியாவின் பெங்களூருக்கு தங்கத்தை சட்டவிரோதமாக கொண்டுசெல்ல முயற்சித்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 26 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமென சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். அக்குரண பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்    இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>...

மனைவியின் காதை கடித்து குதறிய கணவர் கைது

மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியின் காதை கடித்து குதறிய கணவரை போலீசார் கைது செய்தனர். மனைவியிடம் தகராறு தானே, பிவண்டி கோன்காவ் பகுதியை சேர்ந்தவர் பப்பு(வயது50). இவரது மனைவி ராக்மா(40). பப்புவிற்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி மனைவி ராக்மாவிடம் பணம்கேட்டு துன்புறுத்தி வந்தார். சம்பவத்தன்று வழக்கம்போல் பப்பு வீட்டிற்கு மது குடித்துவிட்டு வந்தார். அவரிடம் சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுக்கும்படி ராக்மா கூறினார். அப்போது அவர் தனக்கு மது குடிக்க...

30 October 2014

விசாரணைய தொடங்குகிறது கருப்பு பணம் குறித்து 90 பேருக்கு எதிராக

கருப்பு பண விவகார வழக்கில், வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள 627 இந்தியர்களின் பெயர் பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இதில் இடம்பெற்றுள்ள மும்பை நகரை சேர்ந்த 90 நபர்களில் கணக்கில் குற்றம் எதுவும் நடைபெற்றுள்ளதாக என்பதை அறிய விசாரணை நடத்த முதல்கட்ட நடவடிக்கையை மும்பை வருமானவரித்துறை விரைவில் தொடங்க உள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள 627 இந்தியர்களில், 235 பேர் மும்பை சிட்டியை சேர்ந்தவர்கள் மும்பை வருமான...

தணிக்கையாளர் அறிக்கைகளை பரபரப்பு ஆக்கக் கூடாது:

டெல்லியில் தலைமை கணக்கு தணிக்கையாளர் வருடாந்திர மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கணக்கு தணிக்கையாளர் என்பவர் ஒரு முடிவு எடுக்கப்பட்ட பின்னர் அதை நாம் ஆய்வு செய்கிறோம் என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும். சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கின்றனவா என்பதை பார்க்க வேண்டும். தலைமை கணக்கு தணிக்கையாளர் தனது அறிக்கைகளை பரபரப்பாக்க கூடாது. தலைப்பு செய்திகளில் தலைமை...

29 October 2014

உறுப்பினர் பதவி ஜெயலலிதாவிற்கு பறிபோகுமா?

சபாநாயகரின் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதாவிற்கு சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை உத்தரவை தமிழக சட்டசபைக்கு அனுப்பி வைத்துள்ளது பெங்களூர் சிறப்பு நீதிமன்றம். சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றவாளி என்று கடந்த மாதம் 27ம்தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயலலிதா முதல்வர் பதவியை மட்டுமின்றி ஸ்ரீரங்கம்...

மர்ம முறையில் இங்கிலாந்தில் இந்திய குடும்பம் மரணம்

இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் ஜதீந்திர லாட் (வயது 49). இவர் மனைவி துக்ஷா (44), மகள்கள் திரிஷா (19), நிஷா (17) ஆகியோருடன், இங்கிலாந்து நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கிளேட்டன் என்ற அழகிய கிராமத்தில் வசித்து வந்தார். அக்கம்பக்கத்தினருடன் இணக்கமான நல்லுறவை பராமரித்து வந்துள்ளனர். தொடர்ந்து சில நாட்களாக இவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதுபற்றி அதிர்ச்சியும், கவலையும் அடைந்த அக்கம்பக்கத்தினர், போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து சென்று,...

பேட்டிங் தர வரிசையில் இந்திய வீரர் கோலிக்கு பின்னடைவு

சர்வதேச கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியல் அவ்வப்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டு வருகிறது. தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடர் முடிவில் ஐ.சி.சி. தர வரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன்படி பேட்டிங் தர வரிசையில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா ஒரு இடம் முன்னேறி...

28 October 2014

கடத்தப்படவிருந்த 50 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

 இராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்தப்படவிருந்த தடை செய்யப்பட்ட 50 கிலோ பதப்படுத்திய கடல் அட்டைகளை பறிமுதல் செய்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, மண்டபம், பாம்பன் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மண்டபம் சேதுநகர் கடற்கரைப் பகுதியில் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினருக்கு...

வானொலியில் கட்டாய ஹிந்தி - மீண்டும் மொழிப் போராட்டம் !!

  ஆட்சிக்கு வந்த நாள் முதல், இந்த நாட்டு மக்களுக்கு உறுதியளித்த எதையும் நிறைவேற்றாத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு, இந்தி மொழித் திணிப்பை மட்டும் இடையறாது செய்து வருகிறது. மத்திய அரசின் துறைகளில் இருந்து பள்ளிக் கல்வி வரை ஏதாவது ஒரு வழியில் இந்தி மொழிப் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் தீவிரம் காட்டிவந்த மோடி அரசு, இப்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களிலும் இந்தித் திணிப்பை ஆரம்பித்துள்ளது. மாநில மொழி வானொலி நிகழ்ச்சிகளில்...

27 October 2014

அமைச்சர்கள் வழிபாடு ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும்! -

  கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்தார். அ.தி.மு.க பொது செயலாளர், முன்னாள் முதலமைச்சர், தமிழக மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வேண்டி கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் புனித தெராசா சர்ச் மற்றும் சி.எஸ்.ஐ. சர்ச் உள்ளிட்ட தேவாலயங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை...

அக்னி-5 ஏவுகணை சோதனை அடுத்த மாதம் நடக்கிறது

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை -5 இந்திய ராணுவம் ஏவுகணைகளை தயாரித்து சோதனை நடத்தி வருகிறது. அக்னி என்ற பெயரிடப்பட்ட இந்த வரிசையில் ‘அக்னி-1’ 700 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடியது. ‘அக்னி-2’ 2 ஆயிரம் கிலோ மீட்டரும், ‘அக்னி-3’ மற்றும் ‘அக்னி-4’ முறையே 2,500 கி.மீ, 3,500 கி.மீ.க்கு மேல் சென்று தாக்கக் கூடியவைகளாகும். ஏவுகணை தொழில்நுட்பத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அக்னி-5 ஏவுகணையை இந்திய ராணுவம் தயாரித்துள்ளது. அணு ஆயுதங்களை சுமந்து...

வரதட்சணை கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க

அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஒரு பெண், அவளுடைய கணவராலோ அல்லது அவருடைய குடும்பத்தினராலோ சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டால், அவர்களுக்கு மூன்று ஆண்டு வரை ஜெயில் தண்டனையும், அபராதமும் விதிக்க இ.பி.கோ. 498 ஏ பிரிவு வகை செய்கிறது. ஆனால், சமீபகாலமாக வரதட்சணை கொடுமை புகார்கள் அதிகரித்து வருகின்றன என்றும், இந்த சட்டம், மனைவிமார்களால் கேடயமாக பயன்படுத்தப்படாமல்,...

26 October 2014

உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுகிறது ஒடீசா அரசு

 வரும் 2015 ஜூலை மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுவது என ஒடீசா அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பயனாளர்களை தேர்வு செய்ய களமிறங்குகிறது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், 2011-ல் மத்திய அரசால் இந்தியாவில்  வாழும் இந்திய குடிமக்களுக்கு தங்கள் வாழ்வதற்கு தேவையான பாதுகாப்பான உணவினை அவர்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலமாகவோ அல்லது அவர்களுக்கு நேரடியாக பணமாக வழங்கியோ...

தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு வானிலை மையம் ..

குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை தென்மேற்கு பருவமழை நிறைவடைந்து, தமிழ்நாட்டுக்கு அதிக மழை பொழிவை தருகிற வடகிழக்கு பருவமழை கடந்த 18–ந்தேதியன்று தொடங்கியது. இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. சென்னையை பொருத்தமட்டில் நேற்று வானம் பிரகாசமாக காணப்பட்டது. மழைக்கான அறிகுறிகள் எதுவும்...

25 October 2014

குஷ்பு அதிமுகவில் இணைகிறாராம் ?

நடிகை குஷ்பு விரைவில் அதிமுகவில் இணைவார் என தக்வல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் திமுகவிலிருந்து விலகிய நடிகை குஷ்பு, மவுனம் காத்து வந்தார். இந்நிலையில், அதிமுகவில் குஷ்பு சேரப்போவதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதனிடையே, தீபாவளி சஸ்பென்சாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்போவதாக குஷ்பு அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள குஷ்பு, விரைவில் நல்ல முடிவு எடுக்கப் போகிறேன். அதற்காக என்னை வாழ்த்துங்கள். என்ன முடிவு எடுக்கப்...

பாலியல் பலாத்கார சம்பவம்: விதிகளை மீறி பள்ளிக்கூடம் நடத்திய நிர்வாகி கைது

 வயது மாணவி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக அந்த பள்ளி வாகன டிரைவர்களிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். அதோடு விதிகளை மீறி பள்ளிக்கூடம் நடத்திய நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். 4 வயது மாணவி பலாத்காரம் பெங்களூர் ஜாலஹள்ளி கிராஸ், தும்கூர் மெயின் ரோட்டில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு படிக்கும் 4 வயது மாணவி கடந்த 21–ந் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இதனை கண்டித்து கடந்த 3 நாட்களாக அந்த தனியார் பள்ளி முன்பு பெற்றோர்,...

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேர் பலி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், ஆசனூர். தாளவாடி, கேர்மாளம், பவானி சாகர் உள்ளிட்ட வனப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.தொடர்ந்து மழை பெய்து வருவதால் சத்தியமங்கலம் பகுதியில் தரைப்பாலத்திற்கு மேல் வெள்ளம் செல்கிறது.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வடவள்ளி வேடர் காலனி பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 25) , சுரேந்திர பிரசாத் (23). இருவரும் உறவினர்கள். நேற்று இரவு நண்பர் ஒருவருடன் மோட் டார் சைக்கிளில் சினிமா...

கைது செய்யப்பட்ட மூன்று இலங்கையர்களுக்கு எதிராக குற்ற ???

இந்தியாவிற்கு எதிராக வேவுபார்த்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று இலங்கையர்களுக்கு எதிரான ஆரம்ப குற்ற பத்திரிகை நேற்று சென்னை நகர நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக “நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்பிரல் மாதம் வெளிநாடொன்றில் இருந்து தமிழக கியூ பிரிவிற்கு கிடைத்த தகவலையடுத்து சாகீர் ஹூசேன் என்பவர் கைது செய்யப்பட்டார்....

24 October 2014

ஜெயலலிதா இரங்கல் தனி முத்திரை பதித்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்’-

ஜெயலலிதா இரங்கல் தனி முத்திரை பதித்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்’- தமிழ் திரையுலகில் தனி முத்திரை பதித்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்’ என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். பழம்பெரும் திரைப்பட நடிகரும், ‘எஸ்.எஸ்.ஆர்.’ என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவருமான ‘லட்சிய நடிகர்’ எஸ்.எஸ்.ராஜேந்திரன்...

குறைவான சம்பளம் வழங்கிய நிறுவனத்துக்கு அபராதம்

இந்தியர்களுக்கு அமெரிக்காவில் இ.எப்.ஐ. என்ற நிறுவனம், பாஸ்டர் சிட்டியிலிருந்து பிரிமாண்ட் என்ற இடத்துக்கு இடம் பெயர்ந்தது. அப்போது, அந்த நிறுவனத்துக்கு கம்ப்யூட்டர் இணைப்புகள் வழங்குவது தொடர்பான பணியை 8 இந்திய பணியாளர்கள் செய்து கொடுத்தனர். அவர்களை வாரத்துக்கு 122 மணி நேரம் வரை வேலை செய்ய வைத்த நிறுவனம்,  அவர்களுக்கு மிகக்குறைந்த ஊதியமாக மணிக்கு 1.21 டாலர் (சுமார் ரூ.72) மட்டுமே வழங்கியது. இது தொடர்பான ரகசிய தகவல், அமெரிக்க தொழிலாளர்...

23 October 2014

லாரி கவிழ்ந்து விபத்து 5 பேர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் ஒங்கம்பாடியில் லாரி  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம் பல்லலகுப்பம் கிராமத்தை சேர்ந்த சிலர், வரதம்பட்டியில் துக்க நிகழ்ச்சிக்கு லாரியில் சென்றுள்ளனர். லாரி, அணைக்கட்டு அருகே ஒங்கம்பாடியில் சென்றுக் கொண்டியிருந்தபோது கவிழ்ந்தது. இந்த சம்பவத்தின் 2 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  லாரி பள்ளத்திற்குள் கவிழ்ந்துள்ளது. லாரி கவிழ்ந்த தகவல் அறிந்த அப்பகுதியினர்...

உச்சநீதிமன்றத்தில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் விவரம்:அடுத்த வாரம் ???

சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்களை அடுத்த வாரம் மத்திய அரசு சமர்ப்பிக்க உள்ளது. முதற்கட்டமாக சீல் வைக்கப்பட்ட கவரில் வைத்து 136 பேரின் விவரங்களை மத்திய அரசு சமர்ப்பிக்கிறது. பிரதமர் மோடி, மத்திய நிதி மந்திரி மற்றும் பா.ஜ.க. தலைவர் அருண் ஜெட்லி ஆகியோருக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கருப்பு பணம் பதுக்கிய 800 பேர் பற்றிய விவரங்களை ஐரோப்பிய அரசுகள் அளித்துள்ள நிலையில் முதலில்...

மீண்டும் ஜெ.ஜெயலலிதா முதல்வராவார்- நடிகர் சங்கம் அறிக்கை

சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் நளினி, பொதுச் செயலாளர் பூ விலங்கு மோகன், பொருளாளர் தினகரன்  ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் தமிழக மக்களின் நலன் காக்கும் தங்கத் தலைவியாம் மக்களின் முதல்வர் அம்மா சோதனைகளை கடந்து தமிழகம் திரும்பியிருப்பது சின்னத்திரை கலைஞர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியே.அவர்கள் அனைத்து தடைகளையும் வென்றெடுத்து மீண்டும் தமிழக முதல்வராக ஆட்சிக் கட்டிலில் அமர்வது திண்ணம். பெற்ற தாய்க்கு மேலாக தன்னை நாடி வரும் கோடான கோடி தமிழ் இதயங்களின்...

22 October 2014

கனமழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.

 தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழை, பொதுமக்கள் தீபாவளியை கொண்டாடும் வகையில் நேற்று முன்தினம் மாலை முதல் விடுமுறை அளித்தது. இந்நிலையில் இலங்கைக்கு அருகே வளி மண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாபநாசம் மற்றும் தூத்துக்குடியில்...

தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

உலக தமிழ் உள்ளங்களுக்கு எமது இதயம் கனிந்த இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள். மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு இணைய உலக தமிழ் உள்ளங்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள்அனை வர்க்கும் இந்த நவற்கிரி. நவக்கிரி .நிலாவரை இணையங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம் தீபாவளி பலதேச மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை யாகும்....

21 October 2014

தீ விபத்து: பட்டாசு தொழிற்சாலையில் 10 பேர் பலி

  ஆந்திராவில் உள்ள காக்கிநாடாவில் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் 10 பேர் பலியானார்கள். தீபாவளி பண்டிகைக்கான பட்டாசுகளை தயாரித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தீப்பிடித்தாக கூறப்படுகிறது. தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பிடித்த தீ மள மளவென தொழிற்சாலை முழுவதும் பரவியதாக தெரிகிறது. இத்தீவிபத்தில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தொழிற்சாலையின் மற்ற பகுதிகளிலும் தீ வேகமாக பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால்...

20 October 2014

கடந்த 5 மாதங்களில் ரூ.470 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

 இந்தியா முழுவதும் 5 மாதங்களில் ரூ.470 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 1,780 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உலகிலேயே தங்கத்தை அதிகம் பயன்படுத்துகிற நாடாக இந்தியா திகழ்கிறது.  இந்த நிலையில் சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் உள்ள ஸ்ரீநகர், அமிர்தசரஸ், ஜெய்ப்பூர், டெல்லி, ஆமதாபாத், கவுகாத்தி, நாக்பூர், மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், கோவா, பெங்களூர்,...

லாரி மீது கார் மோதல்: பெண் உள்பட 3 பேர் காயம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆனந்தமேடு பகுதியை சேர்ந்தவர் உமாநாத் (வயது38). நேற்று இவரும் இவரது உறவினர் சந்தோஷ் என்பவரின் மனைவி தேவஸ்ரீ (34) மற்றும் இவரது 2½வயது பெண் குழந்தை ஸ்ரீதிகா ஆகிய 3 பேரும் ஒரு காரில் சென்னை புறப்பட்டு வந்தனர். காரை உமாநாத் ஓட்டி வந்தார். திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் அருகே எழுத்தூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதில் காரை ஓட்டி சென்ற உமாநாத் மற்றும் காரில் பயணம்...

19 October 2014

சுவரில் கார் மோதி தாய்–மகன் உள்பட 4 பேர் பலி…!!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒத்தக்கடையை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 35). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி நேற்று நள்ளிரவு முருகானந்தம் , அவரது மனைவி ஆனந்தி , தாய் வசந்தா(60) மற்றும் உறவினர்கள் 14 பேர் ஒரு காரில் புறப்பட்டனர். காரை முருகானந்தம் ஓட்டினார். இன்று காலை 5 மணிக்கு கார் தூத்துக்குடி முத்தையாபுரம் உப்பாற்று ஓடை ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது...

18 October 2014

கருப்புப் பணம் குறித்த தகவல்களை வழங்க சுவிஸ் அரசு ஒப்புதல்! -

சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கருப்புப் பணம் குறித்து தகவல்களை வழங்க அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசியதாவது.. எச்எஸ்பிசி வங்கியிலும், வரிவிதிப்பு குறைவான லீக்டென்ஸ்டீன் நாட்டிலும் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள தகவல்களைப் பகிர்ந்து கொள்ள சுவிட்சர்லாந்து ஒப்புக் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த...

ஜெயலலிதா என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கிய நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான ஜெயலலிதா என்னவெல்லாம் செய்யலாம் அல்லது செய்ய முடியாது என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் சில வழக்கறிஞர்களிடம் விசாரித்த போது அவர்கள் கூறிய தகவல் வருமாறு... தற்போது தண்டனை மீதான இடைக்காலத் தடை மற்றும் ஜாமீன் பெற்ற நிலையில் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராகவோ முதல்–அமைச்சராகவோ ஆகமுடியாது. ஆனால் அவருடைய ஜாமீன் குறித்து எந்த நிபந்தனையையும் நீதிமன்றம் விதிக்காததால், அவரால் முழுமையாக...

17 October 2014

கொட்டும் மழையில் அதிமுகவினர் கொண்டாட்டம்.

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால், சென்னையில் கொட்டும் மழையில் அதிமுகவினர் உற்சாகத்துடன் கொண்டாடினர். அதிமுக 43வது தொடக்கவிழா கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி, அமைச்சர்கள், நிர்வாகிகள் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். எனினும், ஜெயலலிதா சிறையில் இருந்ததால் உற்சாகமில்லாமல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இன்று மதியம் உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. அப்போது சென்னையில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது....

இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்கள் மீது கல்வீசி தாக்குதல்!..

  நடுக்கடலில் மீன்பிடித்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 15ம் திகதி 535 விசைபடகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் வழக்கம் போல் மீன்வளம் நிறைந்த இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு 6 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து, மீன்பிடிக்க விடாமல்...

16 October 2014

தமிழக சிறைக்குஜெயலலிதாவை மாற்றுமாறு கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில்??

  சொத்துக் குவிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்டு, பார்ப்பன அக்ரஹார சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா ஜெயராமை தமிழக சிறைக்கு மாற்றுமாறு கோரி, இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த வராகி என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக தமிழக நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 4 ஆண்டு சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா ஜெயராம் கர்நாடக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால்,...

15 October 2014

பெண்ணிடம் சில்மிஷம்- இந்திய வாலிபருக்கு சிறை தண்டனை…!!

சிங்கப்பூரில் உள்ள செரங்கூன் ரெயில் நிலையத்தில் கடந்த 7-3-2014 அன்று   ரெயிலை விட்டிறங்கிய ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண், சாலை பகுதிக்கு செல்வதற்காக அங்கிருந்த மின்னுயர்த்தியில் (லிப்ட்) ஏறினார். லிப்ட்டின் கதவு மூடப்போகும் நேரத்தில் வேகமாக ஓடி வந்து லிப்ட்டுக்குள் நுழைந்துக் கொண்ட ஒரு வாலிபர், லிப்ட் மேலே போகும் அந்த இடைவெளி நேரத்தில் கிடைத்த தனிமையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து, முத்தமிட...

14 October 2014

போலீசார் போல் நடித்து நகைக்கடையில் 8 கிலோ தங்க நகை கொள்ளை

மும்பையில் உள்ள பிரபல நகைக் கடைகள் அளிக்கும் ஆர்டரின் பேரில் தங்க நகைகள் செய்து தரும் பல நிறுவனங்கள் ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் இயங்கி வருகின்றன. இவ்வகையில், ஆர்டரின் பேரில் செய்யப்பட்ட 8 கிலோ தங்க நகைகளைப் பெற்றுக் கொண்ட மும்பை நகைக்கடையின் பணியாளர்களான ஜித்தேன் பிரசாத், தேவேந்திரா ஆகியோர் ஐதராபத்தில் இருந்து பெங்களூருக்கு சென்று, அங்கிருந்து மும்பைக்கு செல்லும் திட்டத்தில் லக்காடி கா புல் பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். பெங்களூர்...

12 October 2014

கனடா தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் நியமனம்

இந்தியாவுக்கான கனடா நாட்டுத் தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடிர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகமும், வர்த்தக மேம்பாட்டுத் துறையும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவுக்கான கனடா தூதராக நாடிர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். தனது அனுபவத்தைப் பயன்படுத்தி, கனடா – இந்தியா நாடுகளிடையேயான உறவை அவர் மேலும் பலப்படுத்துவார்.இருதரப்பு வர்த்தகம், சர்வதேசப் பாதுகாப்பு உள்ளிட்ட...

சீமான் பேட்டி ஜெயலலிதா வெளியே வருவார்

சீமான் பேட்டி ஜெயலலிதா வெளியே வருவார் வயது மற்றும் அவர் வகித்த பதவியைக்கருதி அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்கும் என்று நம்புவதாக சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சி கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் அந்த கட்சியில் புதிதாக இணையும் தொண்டர்கள் அறிமுக கூட்டம் கோவையில் நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் இளைஞர் பாசறை மாநில செயலாளர் பேராசிரியர் கல்யாண சுந்தரம், அறிவுச்செல்வன் ஆகியோர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கட்சியின்...