தனியார் பொறியியல் கல்லூரி முதல்வரை மாணவர்களே வெட்டிக் கொலை வெட்டிக் கொன்ற கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் இன்பன்ட் ஜீசஸ் பொறியியகல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியின் முதல்வராக சுரேஷ்(55) என்பவர் இருந்து வந்தார். நெல்லை மாவட்டம், சேந்தமங்கலத்தை சேர்ந்த சுரேஷ், பாளையங்கோட்டையில் உள்ள ரகமத்நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.
இதே கல்லூரியில் நாசரேத் அருகே உள்ள வெள்ளரிக்காய் கிராமத்தை சேர்ந்த பச்சைக்கண்ணன் ஏரோநாட்டிக்கல் இறுதியாண்டும், நாகப்பட்டிணத்தை சேர்ந்த பிரபாகரன் சிவில் பொறியியல் இறுதியாண்டும், டேனீஸ் பி.டெக் இறுதியாண்டும் படிக்கின்றனர்.
இவர்கள் மூன்று பேரும் திருநெல்வேலியில் ஒரே அறையில் தங்கியிருந்து படித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 7ம் திகதி கல்லூரி பேருந்தில் இடம் பிடிப்பது தொடர்பாக மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பச்சைக்கண்ணன் மீது முதல்வர் சுரேஷிடம் புகார் கூறப்பட்டுள்ளது.
மாணவன் பச்சைக்கண்ணனிடம், விசாரணை முடியும் வரை கல்லூரிக்கு வரக்கூடாது என்று முதல்வர் சுரேஷ் கூறியுள்ளார்.
இதனால் மாணவன் பச்சைக்கண்ணன் ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து கல்லூரி முதல்வரை கொல்ல பச்சைக்கண்ணன், பிரபாகரன், டேனீஸ் மூன்று பேரும் திட்டம் தீட்டனர்.
இந்நிலையில் கல்லூரி முதல்வர் சுரேஷ் இன்று காலை 8 மணிக்கு கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது மறைந்திருந்த மாணவர்கள் 3 பேரும் சுரேஷை சரமாரியாக வெட்டினர். இதில் முதல்வர் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து முறப்பநாடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 3 மாணவர்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரியில் இருந்து மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களே கல்லூரி முதல்வரை படுகொலை செய்துள்ள சம்பவம் தூத்துக்குடி மாவட்ட மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment